Share via:
மதுரை மாவட்டம், கப்பலூர் சுங்கச்சாவடியை
நிரந்தரமாக மூட வேண்டும் என்று
உள்ளூர் மக்கள் நீண்ட நாட்களாகப் போராடி வருகிறார்கள். அ.தி.மு.க.வின் மாஜி அமைச்சர்
உதயகுமாரும் போராட்டம் நடத்தினார். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியினரும் போராட்டம்
நடத்தி கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கு கடும் ஆட்சேபம்
எழுப்பியிருக்கும் சீமான், ‘கப்பலூர் சுங்கச்சாவடியை
முற்றுகையிட்டு போராடிய நாம் தமிழர்
கட்சி உறவுகளை கைது செய்துள்ள
திமுக அரசின் அடக்குமுறை வன்மையான
கண்டனத்துக்குரியது. திருமங்கலம் பகுதி மக்கள் நீண்ட
காலமாக சுங்க கட்டண விலக்குகோரி
பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த பிறகும், அமைச்சர் தலைமையில்
மூன்று முறை பேச்சுவார்த்தை நடைபெற்று
முடிந்த நிலையிலும் சுங்க கட்டணத்தில் விலக்கு
அளிப்பதில் அரசுக்கு என்ன தயக்கம்
இருக்க முடியும்?
சொந்த நாட்டிலேயே 50 கிலோ மீட்டருக்கு ஒருமுறை
கட்டணம் செலுத்திப் பயணம் செய்வதென்பது ஆங்கிலேயர்
ஆட்சிக்காலத்தில்கூட இல்லாத அடிமை நிலையாகும்.
ஒரு குறிப்பிட்ட பகுதியில்
சாலை அமைக்கப்படும் பணிக்குச் செலவான தொகையினைவிட
அதிகமாக, தொடர்புடைய நிறுவனம் ஐந்தே ஆண்டுகளில்
வசூல் செய்துகொண்ட பிறகும், தொடர்ந்து 15, 20 ஆண்டுகளாக
எவ்விதக் கணக்கு வழக்குமின்றித் தொடர்
வசூல் வேட்டையில் ஈடுபடுவதும், அரசு அதை அனுமதிப்பதும்
எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.
தனியார் நிறுவனங்களின் கட்டணக்கொள்ளைக்கு ஆதரவாக அரசு செயல்படுமாயின்
தமிழ்நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை
நிரந்தரமாக மூடக்கோரி மாபெரும் மக்கள்திரள்
போராட்டத்தை நாம் தமிழர் கட்சி
முன்னெடுக்கும்’’ என்று அறிவித்துள்ளார்.
இந்த அறிக்கையை வைத்து
சீமானை கேலியும் கிண்டலுமாக தி.மு.க.வினர் விமர்சனம் செய்கிறார்கள். ‘’சட்டத்தை
மீறி போராட்டம் நடத்தினால் காவல்துறை கைது நடவடிக்கைதான்
எடுக்கும். இதுகூட தெரியாத தற்குறியா
சீமான்..?’’ என்று கேட்கிறார்கள்.
சுங்கச்சாவடிகளை
அகற்ற வேண்டும் என்று டெல்லி நாடாளுமன்றத்தில் தி.மு.க. போராடி வருகிறது. எனவே, போராட்டம்
நடத்த வேண்டும் என்றால் டெல்லிக்குச் சென்று பா.ஜ.க.வுக்கு எதிராகத்தான் போராட வேண்டும்.
அதற்கு தைரியமும் தெம்பும் இல்லாமல் இந்த விஷயத்துக்கும் தி.மு.க.வுக்கு எதிராகப் போராட்டம்
நடத்துவேன் என்றால் மனநிலை சரியாக இருக்கிறதா..?’’ என்று கிண்டல் அடிக்கிறார்கள்.
அண்ணாமலையை அவ்வப்போது
நேருக்கு நேராக சந்தித்து கட்டிப் பிடிக்கும் சீமான் அவரிடமாவது இதை கேட்கலாமே என்றும்
கிண்டலடிக்கிறார்கள்.