Share via:

சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் பஞ்சமர் நிலம் மீட்பு பேரணி, மாநாடு
குறித்து எந்த ஊடகமும் ஒளிபரப்பு செய்யவில்லை என்பதை சுட்டிக்காட்டி ஊடகங்கள் இருட்டடிப்பு
செய்வது குறித்து நாம் தமிழர் சீமான் வேதனைப்பட்டுள்ளார்.
இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், ‘’நாங்க பஞ்சமர்
நில மீட்பு, சாதிவாரிக் கணக்கெடுப்பு போன்ற மிக முக்கியமான மக்கள் பிரச்சனைய முன்னெடுக்கும்
போதெல்லாம் இந்த ஊடகம் காட்டுறதே இல்ல.. இது எப்படி அறமாக இருக்கும். எங்கள் சக்தி
எல்லாம் வீணாகிறது. என்ன செய்தி போடணும், போடக்கூடாதுன்னு சொல்றதைத்தான் ஊடகம் செய்யுது.
இது தமிழ்நாட்டின் சாபக்கேடு என்று பேசினார்.
மேலும் அவர், ‘’சாராய ஆலைகள் வைத்து நடத்துப்பவர் ஆட்சியில் இருக்கும்பட்சத்தில்
குற்றங்கள் நடக்கத்தானே செய்யும்? பார்த்தவர்களை எல்லாம்
“B” Team என்பார்கள்.. ஏன் என்றால் அவர்கள் “A” team.. நாங்கள்
எப்பவும் மக்கள் Team தான். அவர்கள் சொல்வதையே மீடியா ஒளிபரப்பு செய்யும். சாராய ஆலையில்
4000 கோடி ஊழல் என்றார்கள், பிறகு 1000 கோடி என்றார்கள். இப்போது 100 கோடி என்கிறார்கள்’’
என்றெல்லாம் கிண்டல் செய்தார்.
இப்போது சீமான் கூட்டணி சேரவேண்டும் என்று அவரது கட்சியினரே கோரிக்கை
வைக்கிறார்கள். ‘’இந்த முறை நாம் தமிழர் தனித்து நிற்பதால் திமுக வெற்றியடையவே வாய்ப்பு
அதிகமாக இருக்கும்.. அதிமுகவின் வாக்குகள் குறைந்து பாஜகவை அந்த இடத்தில் அமர செய்யும்.
அதற்குப்பின் நாம் தமிழர் கட்சி மாற்று அரசியலாக வளர்வது மிக மிக கடினம்.. இதில் விஜயும்
தனித்து நின்றால், அடுத்த முதல்வர் உதயநிதி தான். அதிமுக விஜய் கூட்டணி அமைந்தால் நாம்
தமிழர் வாக்கு குறைவதற்கு வாய்ப்புகள் அதிகம். இதையெல்லாம் சீமான் அவர்கள் கணக்கிட்டு
இந்த அரசியலில் முடிவெடுத்தால் நல்லது’’ என்கிறார்கள்.