News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

முன்பு பெரியாரை தங்கள் வழிகாட்டி என்று பெருமைப்படுத்திய சீமான் இப்போது பெரியாரை கடுமையாக அவமதித்து வருகிறார். இந்த விவகாரத்தில் சீமானுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் வெளியாகின. பிரபாகரன் உறவினரை சீமான் விமர்சனம் செய்தது வைரலாகிவருகிறது.

பெரியார் எதிர்ப்பு நிலையைச் சீமான் எடுத்த பிறகு கடும் விமர்சனத்துக்கு ஆளானார். விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுடன் சீமான் இருக்கும் புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்தது தான் தான் என இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் கூறியது கடும் சர்ச்சையை உருவாக்கியது. அதேநேரம், சீமானுக்கு எதிராக பிரபாகரன் அண்ணன் மகனும் ஒரு பேட்டியளித்திருந்தார்.

பிரபாகரன் அண்ணன் மகன் கார்த்திக் மனோகரன் கொடுத்த பேட்டியில், சீமான் கூறுவது எல்லாமே பொய், சந்தித்தது மட்டுமே உண்மை. பிரபாகரனின் போர் வாழ்க்கையை சீமான் அவமானப்படுத்திவிட்டார் என்று கூறியிருந்தார். இதையடுத்து கார்த்திக் மனோகரனின் பிரபாகரனின் நம்பிக்கைக்குரிய உறவினர் இல்லை என்று அவரைப் பற்றி பல்வேறு தகவல்களை நாம் தமிழர் கட்சியினர் பரப்பி வருகிறர்கள்.

கார்த்திக் மனோகரன் பற்றி சீமானிடம் கேட்டதற்கு, ‘அவன் ஒரு பிக்காலிப்பய, அதைப் போய் கேட்டுக்கிட்டு’ என்றவர் அடுத்தபடியாக தலைவர் பிரபாகரன் அவருக்கு முறையில் சித்தப்பா. அதே போல் உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு உறவானவர் தலைவர். உறவு முறை இங்கு முக்கியம் அல்ல. இலக்குதான் முக்கியம். அவரைப் பற்றி நான் பேசத் தேவையில்லை’ என்று கூறிவிட்டார். பாலச்சந்திரன் செத்துப்போன அன்று கேக் வெட்டி கொண்டாடியிருக்கிறார் கார்த்திக் என்று ஒரு படத்தை உலவ விட்டனர்.

இதையடுத்து, ‘போர் உச்சகட்டத்தில் இருந்த நேரத்தில் விஜயலட்சுமி வீட்டில் கேக் வெட்டியது மறந்து போச்சா’ என்று பதில் போஸ்டர் போட்டு வருகிறார்கள். அதோடு, கார்த்திக் மனோகரனை பிக்காலிப்பயல் என்று சீமான் விமர்சனம் செய்ததை வேறு ஒரு கெட்ட வார்த்தையாக மாற்றி தி.மு.க.வினர் சமூகவலைதளத்தில் பரப்பிவிட்டனர். இதையடுத்து பெண் பத்திரிகையாளர் முன்பு இப்படியெல்லாம் பேசலாமா என்று பத்திரிகையாளர்களும் கேள்வி எழுப்பினார்கள். இடையடுத்து நாம் தமிழர் தம்பிகள், ‘வடிவேலு பயன்படுத்திய ‘பிக்காலி பயலே’ எனும் ‘கடும்’ கெட்ட வார்த்தையைப் படத்தில் அனுமதித்த Censor Boardக்கும், அதனை Beep போடாமல் ஒளிபரப்பிய தமிழ்நாட்டு தொலைக்காட்சிகளுக்கும், திரையரங்குகளுக்கும் மனுஷ்யபுத்திரன் கிறுக்கர் மன்றம் சார்பில் கடும் கண்டனங்கள்’ என்று கிண்டல் செய்கிறார்கள்.

வீடியோவை மார்பிங் செய்து கார்த்திக் மனோகரனை கேவலப்படுத்தும் சீமான், பிரபாகரனையும் கேவலப்படுத்தும் நாள் வெகுதொலைவில் இல்ல என்று தி.மு.க.வினர் பரப்பி வருகிறார்கள். சீமான் விவகாரத்தில் எது உண்மை எது பொய் என்று கண்டறிவதே பெரும் பாடாய் இருக்கிறது.  

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link