Share via:

பெரியார் மீது சீமான்
விமர்சனம் வைக்கத் தொடங்கியபிறகு அவரது ஆதரவாளர்களே எதிர்நிலை எடுத்து வருகிறார்கள்.
அவர்களில் ஒருவர் சங்ககிரி ராஜ்குமார். வெங்காயம், பயாஸ்கோப் போன்ற படங்களை இயக்கியிருக்கும்
ராஜ்குமார் பேசிய விவகாரம் தமிழக அரசியலில் கடும் சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது.
சமீபத்தில் பேசிய
சங்ககிரி ராஜ்குமார், ‘’நான் தொலைக்காட்சி
ஒன்றில் டைட்டில் அனிமேட்டராக பணி
செய்து வந்தேன். அப்போது நண்பர்
ஒருவர் பிரபாகரன் மற்றும் சீமான்
புகைப்படங்களை கொடுத்து இரண்டையும் ஒன்றாக
மேட்ச் செய்து தருமாறு கேட்டார்.
எதற்காக என்று கேட்டபோது, சர்பிரைஸ்
கிப்ட் கொடுப்பதற்காக என்று கூறினார். அதனால்
நானும் எடிட் செய்து கொடுத்தேன்.
ஆனால் அதன்பிறகு பிரபாகரன் குறித்து
சீமான் சொல்லும் சில கதைகள்
என்னை வருத்தமடைய செய்தது.
என்னிடம்
எடிட் செய்து கொடுக்க சொன்ன
நண்பரிடம் இது பற்றி பிறகு
கேட்டேன். ஆனால் அவர், நாம்
எடிட் செய்த புகைப்படத்தால் ஒரு
அரசியல் தலைவர் உருவாகி உள்ளார்
என்று சந்தோசமாக கூறினார். இந்த
புகைப்படம் வெளியான காலகட்டத்தில் இது
எடிட் செய்யப்பட்டது என்ற தகவல் வெளியானது.
ஆனால் நான் இதை பற்றி
யாரிடமும் சொன்னது இல்லை. சீமான்
பிரபாகரனை சந்தித்தாரா, இல்லையா என்பது எனக்கு
தெரியாது. ஆனால் அந்த புகைப்படத்தை
எடிட் செய்தது நான் தான்.
நான் வந்தபிறகு தான் அனைவரும்
பிரபாகரன் பெயரை சொல்ல முடிந்தது
என்று சீமான் கூறுகிறார். அந்த
புகைப்படத்தை எடிட் செய்தவன் என்ற
முறையில் எனக்கு சில சமயம்
வருத்தமாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.
பெரியாரை தூற்றத் தொடங்கியதாலே இந்த
உண்மையைச் சொல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்றும் கூறியிருக்கிறார்.
அதேபோல் சீமான் பேசும்
ஆடியோ விவகாரமும் எடிட் செய்யப்பட்டது என்கிறார்கள். அதாவது, இறுதிபோரின்போது
விடுதலை புலிகள் போராட்டத்தை என்னிடம்
தான் கொடுத்துவிட்டு சென்றார்கள். அதற்கு
சான்றாக இறுதிபோரின் போது கடற்புலிகளின் சூசை
பேசும் ஒரு ஆடியோவில் ’சீமாண்ட்ட
முன்னெடுத்து போகச்சொல்லுங்கோ’ என்று சொல்லும் ஒரு
ஆடியோவை காட்டுவார்கள்.
அந்த ஆடியோ என்பது 2009இறுதி
யுத்தத்தின் போது பேசியது என்பதை
சூசை அவர்களின் பேச்சிலிருந்தே உணரமுடியும்.
சுற்றிலும் குண்டுகளை வீசுறான். மக்களை
அப்புறப்படுத்துங்கள் என்று கேட்கிறோம் ஆனால்
குண்டு போட்டுக்கொண்டே இருக்கிறார்கள். ஆனாலும் நாங்கள் சண்டை
போடுறோம் என்று சொல்லும்போது, எதிர் தரப்பில் பேசுபவர்
அழுகிறார். அழாதே அழுதால் பேசமாட்டேன்
என்று உறுதியுடன் தமிழரின் வீரத்தோடு சொல்லும்
சூசை அவர்களிடம் பேசுபவர் இதை நான்
தமிழ்நாட்டு ஊடகங்களுக்கு கொடுக்கவா? என்று கேட்கிறார்.
உடனே ஏற்கனவே தான் சொன்னதை
அழுத்தமாக மீண்டும் சொல்லிவிட்டு, ”சீமான் ட்ட சொல்லு,
சீமான் சார்கிட்ட சொல்லு, சீமான்
வைகோட்ட சொல்லு, சீமான் வைகோ
நெடுமாறன் அய்யா கிட்ட சொல்லு
அவங்கள முன்னெடுக்க சொல்லு” என்று சொல்கிறார்.
இப்படி எல்லோரிடமும் சொல்லி முன்னெடுக்க சொல்லுங்க
என்று சொன்னதை, சீமான்ட்ட சொல்லுங்கன்னு
சொல்றதை மட்டும் வெட்டி15வருடமா
ஈழத்தை வைத்து ஏமாற்றி வருகிறார்’’
என்கிறார்கள்.
இதற்கு நாம் தமிழர்
கட்சியினர் கடுமையாக விமர்சனம் வைக்கிறார்கள். ‘’இத்தனை நாட்கள் கழித்து எடிட் செய்ததை
சொல்கிறார்கள் என்றால் இதுவரை என்ன செய்துகொண்டிருந்தார்?’’ என்று கேட்கிறார்கள்.
எப்படியோ பெரியார்
வில்லங்கம் இப்போது பிரபாகரனிடம் வந்து நிற்கிறது.