Share via:
ஈழத்தில் பிரபாகரன் உயிருக்குப் போராடிக்கொண்டு இருந்த நேரத்தில் நீ என்னுடன் என்ன செய்துகொண்டிருந்தாய் என்று எல்லோருக்கும் புரியும்படி சொல்லிவிட்டேன். இனியும் நீ ஈழம் வாங்கிக் குடுப்பே, இட்லி, சட்னி வாங்கித்தருவேன்னு திரியுறானுங்களே என்று நாம் தமிழர் சீமானையும் அவரது தம்பிகளையும் நடிகை விஜயலட்சுமி திட்டித் தீர்த்து அடுத்த வீடியோ வெளியிட்டு பகீர் கிளப்பியிருக்கிறார்.
நடிகை சீமான் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்த விஜயலட்சுமி, திடீரென அந்த வழக்கை வாபஸ் வாங்கிக்கொண்டு கர்நாடகா போய்விட்டார். சமீபத்தில் ஒரு பேட்டியில், என் மீது ஒரு நடிகை இத்தனை ஆண்டுகளாக குற்றம் சொல்லிக்கொண்டு தான் இருக்கிறார், என்னை என்ன செய்யமுடியும் என்ற வகையில் பேசியிருந்தார். அதற்குப் பதிலடி கொடுப்பது போல் பொங்கித் தீர்த்திருக்கிறார் விஜயலட்சுமி.
அவரது பேட்டியில், ‘சவுக்கு சங்கர் விவகாரம் குறித்து மீடியாக்கள் கேட்டபோது ரொம்பவே கொஞ்சுகிறான். அவனுக்கு பொண்டாட்டி இருக்காங்க, பிள்ளைங்க இருக்காங்க, மாமியார் இருக்காங்கன்னு சொல்றான். பிறகு எதுக்குடா போன வருசம் என்கிட்டே பொண்டாட்டி பொண்டாட்டின்னு பம்மிக்கிட்டு வந்தே.
தி.மு.க.வினரிடம் என் மானம் போகிறது என்று கெஞ்சி மாதம் 50 ஆயிரம் போட்டவன் தானே நீ… இனியும் உன்னை நான் சும்மா விடப்போவதில்லை. உன்னையும் உனக்கு ஆதரவாக இருக்கும் மதுரை செல்வம் மீதும் கர்நாடகாவில் புகார் கொடுக்கப் போகிறேன். எங்களுக்கு யாரும் இல்லையா, அனாதையா நான், என்னை ரோட்டில் பெற்றுப்போட்டு போய்விட்டார்களா..?
நான் விடவே மாட்டேன். இனிமே உங்களுக்கு கர்நாடகாவில் தான் பஞ்சாயத்து இருக்கிறது. என்னுடைய கடைசி மூச்சு இருக்கும் வரையில் போராடிக்கொண்டே தான் இருப்பேன்’ என்று கூறியிருக்கிறார்.
அவரது தம்பிகள் வழக்கம்போல் அமைதி காக்கிறார்கள்.