Share via:
அவ விருப்பப்பட்டு வந்தாள் என்று விஜயலட்சுமியை பாலியல் தொழிலாளி
ரேஞ்சுக்கு சீமான் பேசிய விவகாரம் பெரும் வில்லங்கமாகியிருக்கிறது. கண்ணீரும் கம்பலையுமாக
விஜயலட்சுமி, ‘நான் பாலியல் தொழிலாளியா?’ என்று நியாயம் கேட்கிறார்.
இந்த நிலையில், விருப்பப்பட்டு ஒரு பெண் கூப்பிட்டதும் போகிறார்
என்றால் சீமானும் பாலியல் முதலாளியா..? நானும் விருப்பப்படுகிறேன், சீமான் ரெடியாக
இருக்கிறாரா என்று எக்கச்சக்க பேர் சீமானுக்குப் போன் போடுகிறேன். ‘மாமா… நான் விருப்பப்பட்டு
வர்றேன், எங்க வரணும், எப்படி வரணும், என்ன செய்வீங்க, எவ்வளவு குடுப்பீங்க?’ என்றெல்லாம்
கேள்வி எழுப்புகிறார்கள்.
இந்த நிலையில் எனக்கு எதிராக விஜயலட்சுமியை நிறுத்தி அரசியல் அச்சுறுத்தல்
செய்கிறார்கள் என்று சீமான் பேசியதற்கு பெரியார் ஆதரவாளர்கள் கடும் கண்டனம் தெரிவிக்கிறார்கள்.
‘’ஈழத்திற்காக நீ போட்டது எல்லாம் நாடகம் என உன் முகத்திரை கிழிந்தபோது உனக்கு அச்சுறுத்தல்
வரவில்லை.. ராஜீவ் காந்தியை நாங்க தான் கொன்றோம் எனக் கூறியபோது உனக்கு அச்சுறுத்தல்
வரவில்லை.. பெரியாரை கீழ்த்தரமாக அவமதித்தபோது உனக்கு அச்சுறுத்தல் வரவில்லை.. பெரியார் தொண்டர்கள் மீது வெடிகுண்டு வீசுவேன் எனக்
கூறியபோதும் உனக்கு அச்சுறுத்தல் வரவில்லை.. ஆனால், ஒரு நடிகையை கற்பழிப்த்தததை நீயே
ஒப்புக்கொண்டதும் உனக்கு அச்சுறுத்தல் வந்துவிட்டதா..?’’ என்று கொதிக்கிறார்கள். அதோடு
சீமானை கைது செய்ய வேண்டும் என்று போஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள்.
இந்த நிலையில் சீமானின் மாற்றம் குறித்து புளூசட்டை மாறன், ‘’2010:
காலில் விழுகிறேன். பிரச்னை செய்யாதே. உன்னை ஊரறிய திருமணம் சேய்து கொள்கிறேன் என்றார்
சீமான். அடுத்த 2011 ஈழத்தாயே. அவள் என்மீது வழக்கு போடப்போகிறாள். காலில் விழுகிறேன்.
என்னை காப்பாற்றுங்கள். உங்களை பாராட்டி பிரச்சாரம் செய்கிறேன். இலை மலர்ந்தால் ஈழம்
மலரும்.
2018: பெண்ணே… தயவு செய்து வழக்கை வாபஸ் வாங்கு. மாதம்
50,000 தருகிறேன். 2019: பெருநதமிழர் அவர்களே.. பாலியல் வழக்கை கண்டுகொள்ளாதீர்கள்.
தைப்பூசத்திற்கு விடுமுறை தநத தங்கத்தமிழர் என பாராட்டி பேசுகிறேன். 2025: சங்கி என்றால்
நண்பன் என்று சொல்கிறேன். பெரியாரை திட்டுகிறேன். அந்த வழக்கு டில்லிக்கு வந்தால்..
என்னை காப்பாற்றி விடுங்கள். காலில் விழுகிறேன்..’’ என்று மாற்றம் அடைந்திருக்கிறார்
என்று விமர்சனம் செய்திருக்கிறார்.
விஜயலட்சுமி என்றால் யாரென்றே தெரியாது என்று சொன்ன சீமான் இப்போது
விருப்பத்துடன் அவருடன் உறவு வைத்துக்கொண்டேன் என்று ஒப்புக்கொள்ளும் அளவுக்கு உண்மை
பேசத் தொடங்கியிருக்கிறார். இதற்கும், ’’எங்க அண்ணன்கிட்டே இருக்கிற அந்த நேர்மை எங்களுக்கு
ரொம்பப் பிடிச்சிருக்கு’’ என்று நாம் தமிழர் தம்பிகளும், தங்கைகளும் பாராட்டி கை தட்டுகிறார்கள்.