News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

காளியம்மாளை பிசிறு என்று சீமான் பேசிய ஆடியோ செம வைரலானது. அது சீமான் பேசிய ஆடியோ இல்லை என்று அவரது கட்சியினர் நினைத்தபோது, உண்மையான ஆடியோ என்று சம்பந்தப்பட்ட அத்தனை பேரும் ஒப்புக்கொண்டார்கள். இதையடுத்து காளியம்மாளை சீமான் சந்தித்துப் பேசினார் என்றாலும் இன்னமும் இருவரும் சமாதானம் ஆகவில்லை.

இந்த நிலையில் காளியம்மாளை சீமான் எச்சரிக்கும் ஒரு ஆடியோ வெளியாகியிருக்கிறது. அந்த ஆடியோவில், மீனவ பகுதியில் காளியம்மாள் தனியாகக் கூட்டம் போட்டு அவருக்கு ஆதரவாக ஆட்களைப் பிடிப்பது குறித்துப் பேசுகிறார். அந்த கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு ஆளுக்கு 2000 கொடுத்து ஒரு செல்போனும் கொடுத்தது ஏன் என்று எச்சரிக்கை செய்கிறார். இப்படி நீ என்ன செய்றேன்னு பார்க்கிறது தான் எங்க வேலையா, நான் கட்சியை வளர்க்கவா இல்லைன்னா உன்னை பார்த்துக்கிட்டே இருக்கணுமா.. இப்படித்தான் ராஜீவ்காந்தி, கல்யாணசுந்தரத்தை வளர்த்துவிட்டதும் துரோகம் செஞ்சிட்டுப் போனாங்க. இனியாவது ஒழுங்காக நடந்துகொள் என்று எச்சரிக்கை ஆடியோ வெளியாகியுள்ளது.

இது பழைய ஆடியோவா அல்லது புதியதா என்று புரியாமல் நாம் தமிழர்களின் தம்பிகள் விழிக்கிறார்கள். அதேநேரம், இராவணன் குடிலை சீமான் கட்சியின் சொத்தாகப் பதியாமல் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பாக்கியராஜன் பெயரில் வாங்கியிருப்பதை தி.மு.க.வினர் ஆதாரத்துடன் எடுத்துப்போட்டு விமர்சனம் செய்கிறார்கள்.

‘’கட்சி அலுவலகம் என்பது தனி நபரின் பெயரில் வாங்கும் சொத்தல்ல அது கட்சியின் சொத்து என்பதை அறிந்தும் சீமான் இப்படி வாங்கியிருக்கிறார். இது பாக்யராசனை கட்சியை விட்டு விலக்கவே கூடாது என்பதற்க்கான ஏற்பாடு, கட்சி வரவு செலவு கணக்குகள் பணம் எங்கு வாங்குவது என்ற எல்லாம் பாக்யாவல் நிர்வாகம் செய்யப்படுகிறது, தனி நபர் பாக்யா பெயரில் 2 கோடியே 42 இலட்சம் மதிப்பில் சொத்தை வாங்கி இருக்கின்றனர், திரள் நிதி திரட்டி கட்சி அலுவலக செலவு என்று மாதம் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை தம்பிகளின் டவுசரில் இருந்து திருடும் சீமான் இதை பொதுச் சொத்தாக கட்சி சொத்தாக மாற்றாமல் பாக்யாவின் சொந்த சொத்தாக மாற்றியுள்ளார்’ என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

வரும் தேர்தலில் நாம் தமிழர் வாக்குகளை விஜய் பறித்துவிடுவார் என்று பதட்டம் நிலவும் நிலையில், கட்சிக்குள்ளும் போராட்டம் நடத்தும் சூழலுக்கு சீமான் மாறியிருக்கிறார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link