Share via:
பிரதமர் மோடி தொடங்கிவைத்த 5வது தேசிய ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கான கலந்தாய்வுக் கூட்டத்தில்
சீமானின் நாம் தமிழர் கட்சியை பிரிவினைவாதம் தூண்டும் கட்சி என்று திருச்சி எஸ்.பி.
பேசியிருக்கும் விவகாரம் தம்பிகளை சூடேற்றியுள்ளது. போலீஸ் சட்டையைக் கழட்டிட்டு சண்டைக்கு
வாங்க என்று மல்லுக்கட்டுகிறார்கள்.
சண்டிகரில் நடந்த கூட்டத்தில் பேசிய திருச்சி SP வருண்குமார்,
“தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி என்றொரு அமைப்பு இருக்கிறது. தொடர்ந்து பிரிவினைவாதம்
பேசக்கூடிய ஒரு கட்சியாக இருக்கிறது. பொதுமக்களை தொடர்ந்து ஆபாசமாக வக்கிரமாக பேசக்கூடிய
கட்சியாக அது இயங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் அந்த ஆபாச தாக்குதலில் நானும் என்
குடும்பமுமே பாதிக்கப்பட்டிருக்கிறோம்.. எனவே கூர்மையாக கவனிக்கப்பட வேண்டிய பிரிவினைவாத
ஆபாச தாக்குதல் கட்சி” என ஸ்லைடு போட்டுக் காட்டியிருக்கிறார்.
இதற்கு நாம் தமிழர்கள் கட்சியில் இருந்து கடும் கண்டனம் எழுந்துள்ளது.
‘’வெள்ள பாதிப்பை திசை திருப்ப இது ஒரு பொழப்பு தூக்கிட்டு வரானுங்க தமிழ்நாடு மண்ணுக்காகவும்
மக்களுக்காகவும் பேசுற நாங்க பிரிவினைவாதியாக இருந்துட்டு போறோம்டா பாத்துக்கலாம்.
ஆளுங்க கட்சிக்கு எப்போதெல்லாம் பிரச்சனை வருகிறதோ அப்போதெல்லாம் உபிஸ் களிடம் இருந்து
கழகத்தை காப்பற்ற அண்ணன் சீமான் தான் இவன்களுக்கு தேவைபடுவார்’’ என்று கொதிக்கிறார்கள்.
நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்தி, ‘’கடந்த 15 ஆண்டுகளாக
தேர்தல் அரசியலில் பங்கு பெற்று வரும் நாம் தமிழர் கட்சியை பிரிவினைவாத இயக்கம் என்று
ஒரு காவல்துறை அதிகாரி கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. காவல்துறை அதிகாரி ஒரு
சார்பு அரசியல் வாதி மாதிரி செயல்படுவது இந்திய அரசியலில் இதுவொரு தவறான முன்னுதாரணம்.
தமிழின வாதம் பேசும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் உலகம் முழுவதும் பரவி இருக்கிறார்கள்.
அவர்களுக்கு நாடு முழுவதும் அனுதாபிகள் இருக்கிறார்கள். தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள்
இயக்கத்துடன் உறவு வைத்துள்ளார்கள் என்பதெல்லாம் உண்மை தான்.
திமுகவுக்கு மூன்றாம்கட்ட அல்லக்கை வேலை பாக்குறது, ஆடியோக்களை
விட்டு அற்பச் சுகம் காணுறது, மொறச்சு பாக்குற மாதிரி போட்டோ போடுறது, வாட்சப்ல ஸ்டேட்ஸ்
வச்சுட்டு, அத செய்தியா போடச் சொல்லி பத்திரிக்கையாளர்கள்கிட்ட லாபி பண்றது, பிரிவினைவாத
இயக்கம்ன்னு டெல்லில போய் பினாத்துறது, பொய் வழக்குப் போட்டு கைதுபண்றது, கைதுபண்றவங்கள
கண்ணகட்டிட்டு அடிச்சு சித்ரவதை பண்றதுன்னு சில்லறைத்தனமா எச்சவேலை பாக்குறத விட்டுட்டு,
அரசியலுக்கு நேரடியா வாங்க Bro! துணிவு, திராணி ஏதும் இருந்தா உங்க பதவிய ராஜினாமா
பண்ணிட்டு, நேரடியா அரசியலுக்கு வாங்க..மோதுவோம்.. அதவிட்டுட்டு, கோழைத்தனமா திமுக
அரசோட முதுகுக்குப் பின்னால ஒளிஞ்சுக்கிட்டு வாய்ச்சவடால் விடாதீங்க..’’ என்று சவால்
விட்டிருக்கிறார்கள்.
சாட்டை துரைமுருகன், ‘’எங்கள் நிலத்தையும் மண்ணையும் மொழியையும்
நேசிப்பதற்கு பெயர் பிரிவினைவாதம் என்றால் ஆம் நாங்கள் பிரிவினைவாதிகள் ! தமிழ்நாட்டை
தமிழர் ஆளவேண்டும் என்று சொல்வது பிரிவினைவாதம் என்றால் ஆம் நாங்கள் பிரிவினைவாதிகள்
! காவிரியில் தண்ணீர் தராத கர்நாடகாவிற்கு நெய்வேலி மின்சாரம் தரமாட்டோம் எனச் சொல்வது
பிரிவினைவாதம் என்றால் ஆம் நாங்கள் பிரிவினைவாதிகள் ! எங்கள் நிலமான கச்சத்தீவை திருப்பி
எடு என்று போராடுவது பிரிவினைவாதம் என்றால் ஆம் நாங்கள் பிரிவினைவாதிகள் ! தமிழர் நிலத்தை
நாசமாக்க துடிக்கும் நாசக்கார திட்டங்களான ஸ்டெர்லைட் ,டங்ஸ்டன் சுரங்கம் ,மீத்தேன்
,பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராடுவது பிரிவினைவாதம் என்றால் ஆம் நாங்கள்
பிரிவினைவாதிகள் ! இந்தி ,சமஸ்கிருத மொழிகளை தமிழ்மக்களிடத்தில் திணிக்காதே என பேசுவது
பிரிவினைவாதம் என்றால் ஆம் நாங்கள் பிரிவினைவாதிகள் ! ஊழல் கரைபடிந்த ஆட்சியை அகற்றி
நேர்மையான ஆட்சி அமைக்க போராடுவது பிரிவினைவாதம் என்றால் ஆம் நாங்கள் பிரிவினைவாதிகள்தான்’’
என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.
வருண்குமார் அரசியலுக்கு வர மாட்டார், தம்பிகள் படிச்சு ஐ.பி.எஸ்.
ஆகி அவர்கிட்டே மோதுங்க என்று தி.மு.க.வினர் வருண்குமாருக்கு ஆதரவாகப் பதிவுகள் போட்டுவர,
சமூகவலைதளத்தில் அனல் பறக்கிறது.