Share via:
சீமான் என்ன சொன்னாலும் அதை ரசிப்பதற்கு ஒரு கூட்டம் இருந்துவந்தது.
அதனால்தான் ஆமைக்கறி தொடங்கி எக்கச்சக்க கதைகள் சொல்லிவந்தார். விஜய் கட்சி ஆரம்பித்து
பெரியாரைத் தலைவர் என்றதும், அதை எதிர்ப்பதற்காகவே பெரியார் மீது தாக்குதல் நடத்தினார்
சீமான். இப்போது புலி வாலை பிடித்த கதையாக தொடர் சிக்கலுக்கு ஆளாகி வருகிறார்.
திடீரென சென்னையில் எக்கச்சக்க போஸ்டர்கள் முளைத்தன. அந்த போஸ்டரில்,
‘மானங்கெட்ட உன்னோடு இனியும் இருக்கப்போவதில்லை’, ‘அண்டப்புளுகனோடு இனியும் இருக்கப்போவதில்லை’
என்று மறைமுகமாக சீமானை திட்டியிருந்தார்கள். இதை உறுதிபடுத்துவது போன்று இன்று நாம்
தமிழர் கட்சியில் இருந்து மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், கடந்த தேர்தல்களில்
போட்டியிட்ட வேட்பாளர்கள் என 3 ஆயிரம் பேர் திமுகவில் இன்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில்
இணைந்திருக்கிறார்கள்.
அதோடு, சீமான் வீட்டை முற்றுகையிட வந்த பெரியாரிஸ்டுகளை தாக்குவதற்காக
சட்டவிரோதமாக ஆயுதங்களுடன் கூடியிருந்த 180 பேர் மீது நான்கு பிரிவுகளில் காவல் துறை
வழக்கு பதிவு செய்து அலறவிட்டுள்ளது.
இந்த நிலையில் சீமான் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுடன்
எடுத்த புகைப்படம் தொடர்பாக பிரபாகரனின் அண்ணன் மகன் கார்த்திக் கொடுத்திருக்கும் பேட்டியும்
அனல் தெறிக்க விட்டுள்ளது. அந்த பேட்டியில், ‘’சீமான் பிரபாகரனை சந்தித்தது உண்மை தான்.
ஆனால், அவர் சொல்வதுபோல் மணிக்கணக்கில் எல்லாம் அந்தச் சந்திப்பு நடக்கவில்லை. குறைந்தது
8ல் இருந்து 10 நிமிடம் வரை அந்தச் சந்திப்பு நடந்திருக்கலாம். அவர் புகைப்படம் எடுப்பதற்கான
வாய்ப்பு இருந்திருக்கும். சீமான் விருப்பம் தெரிவித்து அங்கு வருகிறார். சித்தப்பாவும்,
யார் தன்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டாலும் புகைப்படம் எடுத்துக்கொள்வார்.
ஆனால், அதனை வருபவர்களின் கேமராக்களில் எடுக்க அனுமதி கிடையாது. குடும்ப உறவினர்களே
ஆனாலும், பாதுகாப்பு காரணமாக இயக்கத்தின் கேமராவில் தான் புகைப்படம் எடுக்கப்படும்.
அதன் பிறகு அந்தப் புகைப்படத்தை அவர்களிடம் கொடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன.
ஒருவேளை அப்படியான கட்டுப்பாட்டில் சீமானின் புகைப்படம் கொடுக்கப்படாமலும் இருந்திருக்கலாம்.
அதனால், அவர் தனது அரசியல் தேவைக்காக இப்படியான ஒரு எடிட் செய்த புகைப்படத்தை உபயோகித்துவருகிறார்
என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது.
ஒரு ஆவணப்படம் எடுப்பதற்கான வேலைகள் நடந்துக்கொண்டிருந்தபோது தான்
இவர் அங்கு சென்றார். அந்தப் படத்தில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ், அந்தக் குழுவில் இவரும்
இடம்பெற்றிருந்தார். சந்தோஷ் தற்போது கனடாவில் உள்ளார். அவர் வாயை திறந்தால் இன்னும்
பல விஷயங்கள் வெளிவர வாய்ப்பு இருக்கிறது.
அசைவம் சாப்பிட்டுவதாக சொன்னதெல்லாம் நடந்திருக்க வாய்ப்பு இல்லை.
காரணம் இவர் அங்கு சென்றதன் நோக்கம் வேறு. சித்தப்பா அங்கு கடுமையான சூழல் இருந்தது.
அவரின் உயிருக்கே ஆபத்து எனும் நிலையில் பல்வேறு சமயங்களில் அவரே அங்கு தங்குவதற்கான
சூழல் இல்லாமல் தான் இருந்தது. இவர் சொன்னது போல், சித்தியை சந்திப்பதற்கான வாய்ப்பே
இல்லை. இட்லிக்குள் கறி வைக்கும் பழக்கம் எல்லாம் எங்களிடத்தில் இல்லவே இல்லை. அங்கு
முதலில் புட்டு போன்ற உணவுகள் தான் அதிகம் இருக்கும்.
சித்தப்பாவோ அல்லது தளபதிகளோ இவருக்கு ஆயுத பயிற்சி எதுவும் கொடுக்கவில்லை.
அந்தப் புகைப்படங்கள் எல்லாம் படத்தில் அவர்கள் எப்படி ஆயுதங்களை பயன்படுத்துகிறார்கள்
என்று காண்பித்தபோது எடுத்த படங்கள். இவர் எனது சித்தப்பாவை உணவு பிரியராகவும், ஸ்டார்
ஓட்டலின் சமையல்காரர் போலவும் சித்தரித்து வருகிறார். அதனை பார்க்கும்போது மன வேதனையாக
இருக்கிறது. இப்படியாக அவர் செய்வது தேசிய தலைவர் எனும் பெயருக்கே அசிங்கத்தை ஏற்படுத்தி
வருகிறார். இதனை என் நண்பர்களிடம் சொல்லி ஆதங்கம் அடைந்துள்ளேன்.
சீமான் இலங்கை சென்று வந்த பிறகு டென்மார்க் நாட்டிற்கு ஒருமுறை
வந்திருந்தார். அப்போது, சித்தியின் அக்காவான அருணா என்பவருடன், அவரது அண்ணன் குடும்பத்தினருடன்
நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. இதில், அருணாவின் கணவர் இலங்கை சென்றபோது, சித்தி
அவரை கவனித்துக்கொண்டதை எல்லாம், சித்தி தன்னை கவனித்தது போல் சீமான் சித்தரித்து பொய்
பேசி வருகிறார்.
இங்கிலாந்தில் இருக்கும் ஒரு தமிழீழ கைம்பெண்ணுடன் சீமானுக்கு
நெருங்கிய பழக்கம் இருந்தது. சீமான், தமிழீழ கைம்பெண்ணைத் தான் திருமணம் செய்வேன் என்று
சொல்லி பல பெண்களை ஏமாற்றியது எல்லாம் நடந்திருக்கிறது. அப்படி ஒரு பெண் தான் அந்த
இங்கிலாந்து பெண். அவருடன் சித்தியின் அக்கா அருணா பழக்கம் கொண்டிருந்தார். அவர் மூலமாக
தான் சீமானுக்கு சித்தியின் அக்கா அருணாவுடனான பழக்கம் நெருக்கமானது. சீமான், அந்த
பெண்ணையும் ஏமாற்றிவிட்டார்’’ என்று கூறி அதிர வைத்திருக்கிறார்.
வழக்கமாக இது போன்ற பேட்டிகளுக்கு எல்லாம் வேகமாக எதிர்வினையாற்றும்
சீமானின் அன்புத் தம்பிகள் இந்த பேட்டி குறித்து இதுவரை வாயே திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அப்படின்னா எல்லாமே உண்மையோ?