Share via:
சென்னையில் அண்ணா நூலகம், மதுரையில் கலைஞர் நூலகம் அடுத்து திருச்சியில்
காமராஜர் நூலகம் என்று பிரமாண்டமாக நூலகம் அமைத்துவரும் தமிழக அரசு மீது சீமானும் சாட்டை
துரைமுருகனும் வீசிவரும் அவதூறுகள் கடுமையான சர்ச்சைக்கு ஆளாகியுள்ளன.
இந்த நூலகங்கள் குறித்து சீமான், ‘’இப்ப யாரு புத்தகம் படிக்கிறா…
நூலகத்துக்கு காதலிக்கிறவங்க மட்டும் தான் வருகிறார்கள்’’ என்று அபாண்டமாகப் பேசியிருந்தார்.
அதேபோல் சாட்டை துரைமுருகனும், ‘’இன்னைக்கு நாம எந்த படத்துக்குப் போகலாம்னு பேசுறதுக்குத்தான்
நூலகத்துக்கு வருகிறார்கள்’’ என்று குற்றம் சுமத்தி வீடியோ வெளியிட்டார்.
இந்த விவகாரம் கல்வியாளர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு சம்பாதித்துள்ளது.
‘’சென்னையிலும் மதுரையிலும் அதிகாலை முதலே மாணவர்கள் நூலகத்திற்கு படை எடுத்துவருகிறார்கள்.
டிஎன்பிஎஸ்சி தேர்வுகள், நீட் நுழைவுத் தேர்வு என்று பல்வேறு விஷயங்களிலும் மாணவர்களுக்கு
வழிகாட்டுதல் வகுப்புகள் நடக்கின்றன. இலவசமாக இணைய சேவை, குளிரூட்டப்பட்ட அறை ஆகியவற்றை
ஏழை மாணவர்களும் பெற்று மிகப்பெரும் பயன் அடைந்துவருகிறார்கள்.
இலங்கையில் ஆமைக்கறி சாப்பிட்டேன் என்று பொய் சொன்னால் யாரும்
போய் கண்டுபிடிக்க முடியாது. ஆனால், சென்னையிலும் மதுரையிலும் நாம் தமிழர் தம்பிகள்
உள்ளே நுழைந்து பார்க்க வேண்டும். அறிவார்ந்த ஒரு சமூகத்தை அரசு உருவாக்கி வருகிறது.
இதை உடைக்கும் வகையில் சீமான் வழக்கம்போல் பொய் சொல்லி வருகிறார். விஜய்யைக் கண்டு
பயந்து போய் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுகிறார்’’ என்று கூறுகிறார்கள்.
இந்நிலையில் பா.ஜ.க. அமைச்சர் நிர்மலா சீதாராமனை சீமான் தனியே
சந்தித்துப் பேசிய தகவலை பா.ஜ.க.வினர் தொடர்ந்து பரப்பி வருகிறார்கள். இதுகுறித்து
இதுவரை சீமான் தரப்பில் எந்த தகவலும் சொல்லப்படவில்லை. பா.ஜக.வின் பி டீம் என்று கூறப்பட்டு
வரும் நிலையில் இந்த சந்திப்பு அறிந்து நாம் தமிழர் தம்பிகள் அதிர்ந்து நிற்கிறார்கள்.