Share via:
சென்னையில் ஃபார்முலா
கார் ரேஸ் நடத்தும் உதயநிதி மீது தொடர்ந்து பலரும் விமர்சனம் செய்துவரும் நிலையில்,
இன்று சீமான் மீது எஸ்.டி., எஸ்.சி. ஆணையத்தின் வழி காட்டுதல் பேரில் வழக்குப்பதிவு
செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நாம் தமிழர் தம்பிகள் அத்தனை பேரும் கொதித்துப் போயிருக்கிறார்கள்.
இந்த விவகாரம் குறித்து
இயக்குனர் களஞ்சியம், ‘’சண்டாளன் என்ற சொல் தமிழ் மற்றும் ஆங்கில அகராதியில், கொடும் பாதகன், துஷ்டன், கொடியவன், மாபாவி, வல்லெதிரி, போக்கிரி பாதகன், எதிராளி என்று பொருள்படும். எனவே, அது சாதியை குறிக்கும் சொல் அல்ல!! அந்த பாடலிலும் மேலே சொன்ன பொருள் படும்படி தான் அந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது!!
சமஸ்கிருதத்தில் மட்டுமே அந்த வார்த்தை சாதியை குறிக்கும் சொல்லாக பயன்படுத்தப்படுகிறது. எனவே இந்த வழக்கு தேவையற்றது,
அர்த்தமற்றது. சீமானை பழிவாங்க வேண்டும்,
அதுவே இந்த வழக்கின் நோக்கம்!! திமுகவின் இந்த நோக்கத்துக்கு SC/ST ஆணையம் துணை போவது தான் வேடிக்கை’’
என்று ஆவேசம் காட்டியிருக்கிறார்.
அதேநேரம் தி.மு.க.
உடன்பிறப்புகள், ‘’இந்த வார்த்தையைப் பயன்படுத்தியதற்கு சீமான் வருத்தம் தெரிவித்ததற்கு ஆதாரம் உள்ளது. எஸ்.சி.
ஆணையத்தின்
விளக்கத்தை ஒரு பக்கம் தவிர்த்துவிட்டுப்பார்த்தாலும்
ஒரு கட்சியின் தலைவன்
பொதுவெளியில் இன்னொரு நபரைப்பற்றி, அவர்
யாராக இருந்தாலும், பேசுவது அநாகரீகமானது, ஆபாசமானது,
கண்டனத்துக்குரியது, உள்நோக்கம் கொண்டது.
நாம் தமிழர் கட்சியில்
தலைவன் முதல் தொண்டர்கள் வரை வக்கிரப்பதிவுகள்
செய்வதும், ஆபாசமாகப்பேசுவதும், ஒருவரது குடும்பத்து பெண்களை
அவதூறு செய்வதும் தொடர்கதையாகிப்போய்விட்டது. இதுதான் தமிழனின்
குணாதிசயமா? இந்த வியாக்கியானங்க்ளை எல்லாம் நீதிமன்றத்தில்
சொல்லுங்கள்’’ என்று பதிலடி கொடுத்துவருகிறார்கள்.
கார் ரேஸ் பஞ்சாயத்தை
திசை திருப்பவே இன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.