Share via:
![](https://tamilnewsnow.com/wp-content/uploads/2025/02/Screenshot-2025-02-18-124437.jpg)
தமிழர்கள் எதற்காக இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கு அண்ணாமலை
ஒரே ஒரு காரணம் சொல்ல வேண்டும் என்று சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் சவால் விடுத்திருக்கிறார்.
சீமான் கட்சியின் தேர்தல் அறிக்கையில் மூன்றாவது மொழியாக இந்தி
உள்ளிட்ட தேசிய மொழிகள் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதையே பா.ஜ.க.வும் சொல்கிறது,
ஆனால், சீமான் தேவையில்லாமல் இந்தி மொழி வேண்டாம் என்று ஏமாற்றுகிறார் என்று அண்ணாமலை
கூறியிருந்தார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘’கட்டாய மொழி
தமிழ் இணைப்பு மொழி ஆங்கிலம் என்று தெளிவாகக் கூறியிருக்கிறோம். விருப்ப மொழி என்று
உலகில் உள்ள எந்த ஒரு மொழியையும் படிக்கலாம் என்றே கூறியிருக்கிறோம். இதில் இந்தி வருகிறது.
தேவை ஏற்படும்போது இந்தி கற்றுக்கொள்ளலாம். வட நாட்டில் வேலைக்குப் போனால் கற்றுக்கொள்வார்கள்.
வட இந்தியாவில் இருந்து இங்கே வந்தால் தமிழ் கற்றுக்கொள்வார்கள். அவ்வளவுதான் இந்தியைக்
கண்டிப்பாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கு ஏதேனும் ஒரே ஒரு காரணத்தை அண்ணாமலையால்
சொல்லச் சொல்லுங்கள் என்று சவால் விட்டிருக்கிறார்.
அதோடு, தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் நிதியைத்
தருவோம் என்பது கொடுங்கோண்மை. ” உரிய நிதியைத் தராவிட்டால் வரி செலுத்த முடியாது”
என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்! ஆனால், அதை திமுக அரசு செய்யாது. திமுக கோழைகளின்
கூடாரம் . நன்றாக பேசும், சண்டை செய்யாது. தாய்மொழிக் கல்விக்கொள்கையே இந்தியாவில்
வாழும் அனைத்து தேசிய இனங்களுக்குமானத் தேவையும், உரிமையும் ஆகும். கல்வியை மாநிலப்
பட்டியலுக்கு மாற்றுங்கள். எங்களுக்கான கல்வியை நாங்கள் கொடுத்துக் கொள்கிறோம்’’ என்று
கூறியிருக்கிஆஅர்.