Share via:

வீடியோவாக மட்டும் சீமானுடன் மோதிக்கொண்டிருந்த நடிகை விஜயலட்சுமியின்
பாலியல் புகார் மிகவும் வில்லங்கமான கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டுர் இருக்கிறது.
இந்த விஷயத்தில் விஜயலட்சுமியால் மட்டுமே சீமானைக் காப்பாற்ற முடியும் என்ற நிலையில்,
மீண்டும் அவரை தாஜா செய்யும் வேலையை தம்பிகள் செய்துவருவதாக சொல்லப்படுகிறது.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி
தொடர்ச்சியாக பல்வேறு பாலியல் புகார் கூறிவந்தார். தன்னை ஏமாற்றி பலாத்காரம் செய்தார்,
கருக்கலைக்க வைத்தார் என்றெல்லாம் குற்றம்சாட்டியிருந்தார். இதுதொடர்பான புகாரின் அடிப்படையில்
தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சீமான் மீது
கடந்த 2011ல் நடிகை விஜயலட்சுமி புகார் அளித்திருந்தார். 2012ல் அதனை திரும்ப பெற்று
கொள்வதாக கடிதம் கொடுத்தார். ஆனாலும், இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ’நடிகை விஜயலட்சுமி எதற்கான வழக்கை
வாபஸ் பெற்றார். இவர் சீமானின் முதல் மனைவியா?’ எனக் கேட்டு சீமான் மனுவை தள்ளுபடி
செய்து உத்தரவிட்டனர்.
இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பில்,
‘’மிரட்டலின் அடிப்படையில் சீமானுக்கு எதிரான புகாரை நடிகை விஜயலட்சுமி திரும்ப பெற்றுக்
கொண்டது தெளிவாகிறது. பாலியல் வன்கொடுமை புகார் தீவிரமானது. அதை தன்னிச்சையாக திரும்ப
பெற முடியாது. விஜயலட்சுமி வாக்குமூலத்தில் கூறிய புகார்கள் சீமானுக்கு எதிரான குற்றச்சாட்டை
உறுதிபடுத்துகின்றன. சீமான் வற்புறுத்தலால் 6, 7 முறை விஜயலட்சுமி கருக்கலைப்பு செய்துள்ளதாக
தெரிய வந்துள்ளது.
நடிகை விஜயலட்சுமியிடம் இருந்து பெருந்தொகையை சீமான் பெற்றுள்ளார். சீமான் மீது எந்த
காதலும் இல்லை. குடும்ப பிரச்சினை, திரைத்துறை பிரச்சினையால் சீமானை விஜயலட்சுமி குடும்பம்
அணுகியுள்ளது. அப்போது தான் திருமணம் செய்து கொள்வதாக கூறி உறவு வைத்துள்ளார். எனவே இந்த
வழக்கில் இருந்து சீமானை விடுவிக்க முடியாது’’ என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
பாலியல் வன்கொடுமை புகார் தீவிரமானது. அதை தன்னிச்சையாக திரும்ப
பெற முடியாது ஆகவே சீமான் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்ய முடியாது என்று சீமான்
மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த விவகாரத்தில் சீமான் மீது
பாலியல் வழக்கு தொடரவும் கைது செய்து சிறையில் அடைக்கவும் வாய்ப்பு உள்ளது.
இந்த வழக்கில் சீமானுக்கு எதிராகத் தீர்ப்பு வந்தால் சீமான் சொத்துக்களை
எல்லாம் விஜயலட்சுமிக்குக் கொடுக்க வேண்டும். அதனாலே தன் பெயரிலும், கட்சி பெயரிலும்
நிலங்களை சீமான் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், கயல்விழி பேரில் வாங்கிய
சொத்துக்களை விஜயலட்சுமி கேட்கலாம், அவை எல்லாமே திரள் நிதியில் வாங்கப்பட்டவை என்று
பாயிண்ட்ஸ் எடுத்துக் கொடுக்கிறார்கள்.
அதேநேரம், முன்னர் விஜயலட்சுமியை சமாதானப்படுத்தியது போன்று மீண்டும்
அவருக்குப் பணம் கொடுத்து பொய்யாக குற்றம் சாட்டினேன் என்று சொல்வதற்கு சீமான் ஏற்பாடு
செய்துவருவதாக சொல்லப்படுகிறது. அவரையும் அண்ணியாக்கிவிட்டால் சீமானுக்குப் பிரச்னை
வராது என்றும் தம்பிகள் ஆலோசனை சொல்லிவருகிறார்கள்.