Share via:
ஏசியா புக் உலக சாதனைக்காக தொடர்ந்து 12 மணிநேரம் மறைந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய பாடல்களை பாடும் நிகழ்ச்சி சென்னையில் தொடங்கியது.
மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. காலை எழுந்தது முதல் இரவு உறங்கும் வரையிலும் அவர் பாடிய பாடல்களை ஒரு முறையாவது கேட்டு விடாத பாடிவிடாத மனிதர்களே இருக்க முடியாது.
இந்நிலையில் மறைந்த எஸ்பி பாலசுப்ரமணியம் நினைவாக ஏசியா புக் உலக சாதனைக்காக அவர் பாடிய பாடல்களை தொடர்ந்து 12 மணி நேரம் பாடும் பாடல் நிகழ்ச்சி இன்று தொடங்கியது. சென்னை தி.நகர் சர்பிட்டி தியாகராயர் அரங்கத்தில் காலை 8 மணிக்கு பீனிக்ஸ் க்ரு கிளப் சார்பில் 220 ஸ்மூலி சிங்கர்ஸ் களமிறங்கும் இந்நிகழ்ச்சியை எஸ்.பி.பி.யின் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
இந்நிகழ்ச்சியை திரைப்பட நடிகை நளினி, கவிஞர் முத்துலிங்கம், இசையமைப்பாளர் பாலபாரதி ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வை ஏற்பாடு செய்த பாடகர் ரமேஷ் மற்றும் பாடகி கோமதி ஞானம் மற்றும் பலர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.