Share via:
வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலை வெல்வதற்கு ஆளும் பா.ஜ.க. பல்வேறு
கணக்குகளை போட்டுவருகிறது. ராமர் கோயிலை அடுத்து ஞானவாபி மசூதி விவகாரத்தையும் மதுரா
கிருஷ்ணர் கோயிலையும் குறிவைத்து இயங்கிவருகிறது. அதோடு, சிஏஏ குடியுரிமை திருத்தச்
சட்டமும் அமலாக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், இந்தியா முழுக்க பா.ஜ.க.வின் கருத்துக்களை கொண்டுசேர்க்கும்
வகையில் இரண்டு திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று, ரந்தீப்
ஹூடா நடித்துள்ள “ஸ்வதந்த்ரிய வீர் சாவர்க்கர்” படம். இதில் சாவர்க்கர் ஒரு
சுதந்திர போராட்ட தியாகி எனும் ரீதியில் படமாக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கங்கனா ரனாவத் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள படம்
“எமெர்ஜென்சி”. இந்த படம் எமர்ஜென்சி காலத்தில் இந்திராகாந்தி கொடுத்த துயரங்கள்
பேசப்பட இருக்கின்றன.
காஷ்மீர் பிரிவினை சர்ச்சையை அடக்குவதற்காக காஷ்மீர் ஃபைல்ஸ்
திரைப்படம் வெளியிடப்பட்டு இந்திய அளவில் வெற்றியும் பெற்றது. அதே பாணியில், இந்த திரப்படங்களும்
முக்கியப் பங்கு வகிக்கும் என்று சொல்லப்படுகிறது. மக்கள் எப்படி ஆதரிக்கிறார்கள் என்று
பார்க்கலாம்.