News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

கடந்த தேர்தலில் அமைதி காத்த சசிகலா இந்த முறை பொங்கி எழுந்துவிட்டார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் திடீரென தனது ஆதரவாளர்கள் கூட்டத்தை கூட்டி புதிய கட்சியின் கொடியை அறிமுகம் செய்தார். கட்சிக் கொடி அறிவிப்புக்கு ஒரு வாரம் கெடு வைத்திருக்கிறார்.

அதாவது ஒரு வாரத்துக்குள் எடப்பாடி, பாஜகவிடம் இருந்து சாதகமான அறிவிப்புகள் வரலாம் என்று நம்புகிறார். அப்படி வரவில்லை என்றால் அடுத்த வாரம் புதிய கட்சி அறிவிப்பை மதுரையில் பொதுக்கூட்டம் நடத்தி வெளியிட சசிகலா முடிவெடுத்திருக்கிறார். அதிமுக, அமமுக கட்சிகளில் இருக்கும் பலர் சசிகலாவால் தான் ஆரம்பத்தில் பதவிக்கு வந்தனர். சசிகலா அமைதியாக இருந்ததால் தான் அமமுகவிலும், அதிமுகவிலும் அமைதியாக இருந்தனர். இப்போது சசிகலா தனிக்கட்சி என்று கிளம்பினால், கண்டிப்பாக அமமுகவில் இருந்து பெரிய ஆதரவாளர் படை சசிகலா நோக்கிச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது உண்மையாகும் என்பது போன்று இப்போது நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவரும், அதிமுக-வின் முதல் பெண் மாவட்டச் செயலாளரும் முன்னாள் எம்பி-யுமான வசந்தி முருகேசன் அதிமுக-வில் இருந்து விலகினார். அவர் வி.கே.சசிகலாவை நேரில் சந்தித்து, அவர் தொடங்கியுள்ள பெயரிடப்படாத புதிய அரசியல் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இவரைப் போன்று இன்னும் பல நபர்கள் அடுத்தடுத்து வருவார்கள் என்று எதிர்பார்க்கிறார். அதோடு, கூவத்தூரில் என்ன நடந்தது, ஒவ்வொருவரும் தனக்கு எப்படியெல்லாம் மதிப்பும் மரியாதையும் கொடுத்தார்கள் என்பதை வெளிக்காட்டும் வகையில் சில வீடியோக்கள் வெளியிட இருக்கிறாராம்.

இந்த தேர்தலில் ராமதாஸுடன் கூட்டணி வைப்பதற்குப் பேசிக்கொண்டு இருக்கிறாராம். பழம் பெருசுகள் எல்லாம் ஒண்ணுசேர்ந்து என்ன செய்யப்போகுதோ..?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link