News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

விஜய் நடத்தப்போகும் முதல் மாநாட்டுக்கு 33 நிபந்தனைகளை காவல் துறை விதித்திருக்கிறது. இத்தனை நிபந்தனைகளுடன் மாநாட்டை நடத்த முடியுமா என்று கேள்வி எழுந்திருப்பதால் தள்ளி வைப்பதாக தகவல்கள் வருகின்றன. இது விஜய் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

ஆகவே நடிகர் விஜய்க்கு நேரடியாக நெத்தியடிக் கேள்விகளை எழுப்பியிருக்கிறார்கள். ‘’மாநாடு தள்ளிப்போகிறது என்று வரும் செய்தி துரதிஷ்டவசமானது. சரியாக திட்டமிட்டிருக்க வேண்டும். மாநாட்டிற்கு இரண்டு மாதத்திற்கு முன்பே மாநாட்டுப் பணியை தொடங்கியிருக்க வேண்டும்.

கடைசி கட்டத்தில் அனுமதி கேட்டு, காலம் தாழ்த்தியிருக்கக் கூடாது. ஒரு பக்கம் திமுக பயந்து பதட்டப்படுவது கண்கூடாக தெரிகிறது. அதனால் தான் 33 நிபந்தனைகள், பார்க்கிங் பிரச்சனை எல்லாம். ஆனால் அவர்கள் பயத்தின் காரணமாக நமக்கு இடைஞ்சல் செய்வார்கள் என்பது நமக்கு தெரியும் தானே? அப்பொழுது நாம் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டிருக்க வேண்டாமா?

இந்த 6 மாத காலத்தில் TVK IT WING தொடங்கியிருக்கலாம். அன்றாட சமூக பிரச்னையை பேச IT WING உதவியிருக்கும். நமக்கு எதிரான பொய் பிரச்சாரங்களை எதிர்கொள்ளவும் உதவியிருக்கும். பொறுப்பில் இருக்கும் புஸ்ஸி ஆனந்த் ஒருவரால் எல்லாவற்றையும் கவனிப்பது சாத்தியமற்றது. அவருக்கான பதிவு, மரியாதை இருக்கிறது. அதே நேரம் துடிப்போடு கட்சி செயல்பட அவரை கடந்து ஒரு 10,15 பேர்கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும்.

திமுக அதிமுக என ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு விஷயத்திற்கும் பல team-களை வைத்திருக்கிறார்கள். நம்மிடம் அது உருவாக வேண்டும். ஒருவரால் எதுவும் முடியாது. வேலை பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். குழுவில் மாவட்ட செயலாளர்கள், செய்தி தொடர்பாளர்கள், IT WING நிர்வாகிகள், மற்ற அணி நிர்வாகிகளுக்கு, பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். இதுவே ஜனநாயகம்.

அக்குழு ஆனந்தை “கடந்து” நேரடியாக தலைவரை சந்தித்து உரையாட, செயல்பட வேண்டும். இங்கே “கடந்து செல்வது” மிக முக்கியமானது. சசிகலாவை “கடந்து” ஜெயலலிதாவை கடைசி வரை யாரும் நெருங்கவே முடியவில்லை. அது இங்கே நடக்காமல் இருக்க வேண்டும். பல நிர்வாகிகள் பல தகவல்களை உங்களிடம் நேரடியாக பகிர விரும்புவார்கள். அதை சொல்ல தடங்கல் இருக்கக் கூடாது.

234 தொகுதியிலும் மக்களுக்கு தவெகவின் முகமாக ஒருவர் வேண்டும். முக்கியமாக மாவட்ட செயலாளர்களை வளர்த்துவிட வேண்டும். ஸ்டாலினை எடப்பாடியை மா.செக்கள் எளிதாக சந்திக்கிறார்கள். இங்கே? உங்களோடு மா.செக்கள் எந்த தடையும் இல்லாமல் சந்திக்கும்பொழுது தான் அவர்கள் மீது மீடியா வெளிச்சம் வரும். “இன்று தலைவரை சந்தித்தேன், கட்சிப் பணிகள் குறித்து பேசினேன்” இப்படியாக பேட்டி கொடுப்பார்கள். அவர்கள் வெளிச்சம் பெறுவார்கள். மாவட்டத்தில் அவர்களின் முகம் தெரியவரும். மாவட்ட செயலாளர்களும் மற்ற நிர்வாகிகளை வளர்த்துவிடுவார்கள்.

இரண்டாம் கட்ட முகங்கள் அரசியலில் மிக முக்கியம். எம்ஜியாருக்குக் கூட அப்படி பலர் இருந்தனர். அரசியல் அனுபவம் உள்ள மூத்தோரின் சொல்லைக் கேட்டுக்கொண்டு, திட்டத்தை செயல்படுத்தும் போது இளைஞர்களை, நடுத்தர வயதுக்காரர்களை, இன்றைய அரசியல் trend தெரிந்தவர்களை, சுறுசுறுப்பாக செயல்படக்கூடியவர்களை இறக்கிவிடுங்கள்.

முதல் மாநாட்டில் 10 லட்சம் பேராவது கலந்துகொண்டு மாஸ் காட்ட வேண்டாமா? திமுக அதிமுக போல் பணம், குவாட்டர் கொடுத்து நாம் கூப்பிடப்போவதில்லை. உங்கள் முகத்திற்கே அன்பால் வருவார்கள். அது ஏன் 50000 ஆக சுருங்கியது? முக்கியமாக கட்சிக்கு அங்கீகாரமும் கிடைத்துவிட்டது. இனி தாமதம் இல்லாமல் நீங்கள் களத்திற்கு வந்து திருச்சி சிறகனூர் மறுக்கப்பட்டது முதல் விக்கிரவாண்டி வரை திமுக மாநாட்டிற்கு இப்படி 33 நிபந்தனைகள் விதிக்கப்பட்டதா? என்று கேட்டு திமுகவிற்கு பதிலடி கொடுக்க வேண்டும். முக்கியமாக திமுக எல்லாம் பெரிய கட்சியே இல்லை. கூட்டணி இல்லாமல் ஜெயிக்க இயலாத ஒரு சராசரி கட்சி. நீங்கள் ஜனநாயக ரீதியில் அவர்களை திருப்பி அடிக்க வேண்டும் !’’ என்று கேட்டுள்ளார்கள்.

விஜய் சிந்திக்க வேண்டிய நேரம் இது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link