Share via:
கல்வி விருது விழாவில் அரசியல் பேசாமல் ஒதுங்கிக்கொண்ட விஜய் மீண்டும்
அறிக்கை அரசியலைக் கையில் எடுத்திருக்கிறார். மத்திய அரசு சாதிவாரிக் கணக்கெடுப்பு
நடத்துவது போதாது, தமிழக அரசும் ஆய்வு செய்ய வேண்டும் என்று கண்டிப்பு காட்டியிருக்கிறார்.
சினிமாவில் போன்று அரசியலிலும் டபுள் ஆக்ட் எதற்கு என்று திமுகவினர் வரிசை கட்டி விஜய்யை
வெளுத்துக்கட்டுகிறார்கள். ஒன்றிய அரசை காப்பாற்றுவதற்காகவே தமிழக அரசு மீது மீண்டும்
பாய்ந்திருக்கிறார் விஜய் என்று பதிலடி கொடுக்கிறார்கள்.
இதுகுறித்து பேசும் திமுகவினர், ‘’தமிழ் நாட்டில் இந்தியாவில்
எங்குமே இல்லாத வகையில் 69% இட ஒதுக்கீடு உள்ளது. அதனால் மாநில அரசு எடுக்க கூடிய சாதி
வாரி கணக்காய்வு நமக்கு உகந்தது அல்ல. ஏற்கெனவே பீகார் மா நிலத்தில் இப்படியொரு கணக்காய்வு
நடத்தப்பெற்று, அதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு உயர்த்தப்பட்டது. அதனை பாட்னா உயர்
நீதி மன்றம் ஏற்றுகொள்ளாமல், சாதிவாரி கணக்காய்வின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட இட
ஒதுக்கீட்டை ரத்து செய்தது. இதனை புரிந்துக் கொள்ளாமல், மீண்டும் மீண்டும் கொள்கை எதிரிக்கு
இக்கட்டு ஏற்படும் பொழுதெல்லாம், அரசியல் எதிரிக்கு எதிராக பொங்குவது காமெடியாக இருக்கிறது.
’ஒன்றிய அரசும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தட்டும், மாநில அரசும்
நடத்தட்டும்’ என்கிறார். மாநில அரசுகள் சாதிவாரி சர்வே எடுக்க தடையில்லை, ஆனால் மாநில
அரசுகள் எடுக்கும் சர்வே அடிப்படையில் இட ஒதுக்கீடு மாற்றி அமைக்கப்பட முடியாது என்பதுதான்
இப்போதைய நிலைமை. எனவே இட ஒதுக்கீடு மாற்றியமைக்கப்பட வேண்டுமானால் ஒன்றிய அரசின் சாதிவாரி
கணக்கெடுப்புதான் முக்கியமானது. அவர்களே எடுக்கும்போது, மாநில அரசும் ஏன் எடுக்கவேண்டும்?
! ’அனைத்து வகுப்பினருக்கும் இட ஒதுக்கீடு, உள் ஒதுக்கீடு கிடைக்கும்வகையில்
சென்சஸ் எடுக்கவேண்டும்’ என்கிறார். சென்சஸ் எடுத்துதான் இட ஒதுக்கீட்டை நிர்ணயிக்க
வேண்டும், அல்லது மாற்றியமைக்க வேண்டுமே தவிர, சென்சஸ் எடுக்கும்போதே இட ஒதுக்கீட்டுக்கு
ஏற்ப எடுக்க முடியாது. / மாநில அரசுகள் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டியதில்லை
என்கிற ஒன்றிய அரசின் அறிவிப்பைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு/ என்ற வரி வருகிறது.
அப்படி ஒன்றிய அரசு சொல்லவில்லை. ‘சாதிவாரி கணக்கெடுப்பு என்பதே பிளவுவாதம், அதனால்
ஒன்றிய அரசாகிய நாங்கள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மாட்டோம் ’ என்பதுதான் அதன் நிலைப்பாடாக
இருந்தது. இப்போது வேறுவழியில்லாமல் அதன் நிலைப்பாடு மாறியிருக்கிறது.
பெரியார் கேட்ட விகிதாச்சார பிரதிநிதித்துவத்தை பா.ஜ.க.வுடன் சேர்ந்து
தி.மு.க நிறைவேற்ற மறுக்கிறது என்பது இன்னொரு அபத்தமான கூற்று. இந்த அறிக்கையை எழுதியவருக்கு
‘விகிதாச்சார பிரதிநிதித்துவம்’ என்றால் என்ன, அதற்கும் இப்போதுள்ள இட ஒதுக்கீட்டுக்கும்
என்ன வித்தியாசம் என்றே தெரியவில்லை. பெரியார் கேட்ட ‘விகிதாச்சார பிரதிநிதித்துவம்’
என்பது அந்தந்த சாதியினரின் மக்கள்தொகைக்கு ஏற்ப வழங்கப்படும் இட ஒதுக்கீடு. அதை ஒன்றிய
அரசோ மாநில அரசோ சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதால் மட்டும் வழங்கிவிட முடியாது. அரசியல்
சட்டத்திலேயே மாற்றவேண்டும். ஏனெனில் ‘விகிதாச்சார பிரதிநிதித்துவம்’ என்பதை அரசியல்
சட்டமே ஏற்றுக்கொள்ளவில்லை… இதெல்லாம் விஜய்க்கு யார் எடுத்துச்சொல்வது என்று கேட்கிறார்கள்…’’
விஜய் டீம் பதில் சொல்ல வாங்கப்பா.