Share via:
‘விஜய்க்கு அக்காவா, தங்கச்சியா இருந்தோம், இனிமே பொண்டாட்டியா
கூட இருந்துட்டுப் போறோம்’ என்றெல்லாம் பேசி பில்டப் கொடுத்த விஜய் ரசிகைகள், கல்யாண
வீட்டில் நடிகை த்ரிஷாவுடன் ஜோடியாக உலா வந்ததைக் கண்டு அதிர்ந்து நிற்கிறார்கள்.
இதையடுத்து பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளிவருகின்றன. அதாவது
டைவர்ஸ் நோட்டீஸை வெளிவிட்டதே விஜய் என்கிறார்கள். அதாவது ரசிகர்கள் ரியாக்ஷன் என்ன
என்று பார்த்தார். எல்லோரும் விஜய்க்கு சப்போர்ட் செய்ததால், தைரியமாக த்ரிஷாவுடன்
வெளியே வருகிறார் என்கிறார்கள்.
இது குறித்து பேசும் நாம் தமிழர் கட்சியினர், ‘’சங்கீதாவுக்கு
விஜய்யைப் பழிவாங்கும் நோக்கம் துளியுமில்லை. அவர் கேட்டது விவாகரத்தும், ஜீவனாம்சமும்தான்.
விவாகரத்துக்கான காரணங்களில்தான் விஜய்யின் உறவைக் குறிப்பிட வேண்டியதாயிற்று. அதனையும்
அவர் பகிரங்கப்படுத்தவில்லை. இன்னும் சொல்லப் போனால், விவகாரத்து அறிவிப்பை மற்ற பிரபலங்கள்
போல பொதுச்சமூகத்துக்கு அவர் சொல்லவே விரும்பவில்லை. விவகாரத்து மனு ஊடகங்களில் வெளியானதால்
எல்லாம் வெட்ட வெளிச்சமானது. மற்றபடி, விஜய்யின் முகத்திரையைக் கிழிக்க வேண்டுமென சங்கீதா
எண்ணவில்லை.
அவர் நினைத்திருந்தால் ஒரு காணொளி வெளியிட்டோ, அறிக்கை விடுத்தோ,
செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்தியோ, ஊடகங்களுக்குப் பேட்டியளித்தோ விஜய்யை அம்பலப்படுத்தியிருக்க
முடியும். தன்னைப் பாதிக்கப்பட்டவரென அடையாளப்படுத்தி, பொதுமக்களின் பச்சாதாபத்தை சம்பாதித்திருக்க
முடியும். அதனைச் செய்ய அவர் ஒருபோதும் விரும்பவில்லை. தனது விவாகரத்து வழக்கு ஊடகங்களில்
ஒருபோதும் விவாதிக்கப்படக்கூடாது என்பதை மனுவில் குறிப்பிட்டார். In Camera
Proceedings எனப்படும் ஊடகங்களோ, பொதுமக்களோ, மூன்றாம் நபரோ அனுமதிக்கப்படாத தனி விசாரணையைத்தான்
அவர் கோரினார்.
சங்கீதா முழுமையாகக் கண்ணியம் காத்தார். அப்படிப்பட்ட சங்கீதா
மீது அவர் கட்சியினராலேயே ஆபாசத்தாக்குதல் தொடுக்கப்பட்டது. விஜய்யை, அவரது அரசியலை
மிகக் கடுமையாக எதிர்க்கும் எவரும் சங்கீதா குறித்து ஒரு வார்த்தைகூட எழுதியதில்லை.
ஆனால், விஜய்யின் கட்சியினர் அந்தப் பெண்மணியை அவ்வளவு கீழ்த்தரமாக வசைபாடினார்கள்.
அதனைக் கண்டிக்காது, கள்ள மௌனத்தோடு கடந்துபோனார் விஜய்…’’ என்கிறார்கள்.
இந்த விவாகரத்து செய்தியை முதலில் வெளியிட்டது நியூஸ் செவன் சேனல்.
அந்த சேனல் நிர்வாகம் இப்போது ஆதவ் அர்ஜூனா கையில் உள்ளது. எனவே அந்த சேனல் மூலம் முதலில்
தகவலை கசியவிட்டுப் விஜய் பல்ஸ் பார்த்தார் என்று சொல்லப்படுகிறது.
அதேநேரம் விஜய் ரசிகர்கள் இன்னமும் இந்த விவகாரத்தை நம்பவில்லை.
த்ரிஷாவை தோழி என்றே நம்புகிறார்கள். விஜய் ரசிகர்கள், ‘’நேற்று நம் அண்ணன் கல்பாத்தி
சுரேஷ் அவர்களின் இல்லத் திருமண விழாவில் சென்றிருந்தார் அங்கு திரிஷாவும் வந்து இருந்தார்கள்.
இதை பார்த்து ஒரு சில தவெக தோழர்கள் விரக்தி அடைந்துள்ளார்கள் என்பது அவர்களின் பதிவை
பார்க்கும்போது தெரிகிறது.
ஒன்று மட்டும் புரிந்துக்கொள்ளுங்கள் இதை நாம் எப்படி பார்க்கிறோம்
என்பது ஒன்று இருக்கிறது. நாம் எல்லோருக்கும் தெரியும் திருமதி.சங்கீதா அவர்களின் விவாகரத்து
விவகாரம், திரிஷா போன்ற விஷயங்கள் போன்றவற்றை சர்சையாக போய்க்கொண்டு இருக்கின்றது,
இது நம் தலைவருக்கும் தெரியும் தோழர்களே அதற்கு தான் அவர் இதை வளரவிடாமல் தானும், திரிஷாவும்
நண்பர்களாக மட்டும் தான் உள்ளோம் என்பதை அவர் இதன் மூலம் காட்டி இருக்கலாம் அல்லவா…
பல கோணங்களில் சிந்தித்துப்பாருங்கள் உங்களுக்கே தெரியவரும்.
உண்மையில் உங்களுக்கு தலைவர் விஜய்யை பிடித்து இருந்தால் இதுப்போன்ற
பதிவுகளை போடமாட்டீர்கள். நம் எதிரிகள் நினைப்பது நடந்துக்கொண்டு இருந்தால் நிச்சயம்
அது நமக்கு ஒரு பின்னடைவாக இருக்கும். நாம் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டிய நேரம்
இது…’’ என்கிறார்கள்.
விஜய் ரசிகைகள், ‘குப்பை கூட்டுறவனே ரெண்டு பொண்டாட்டி வைச்சிருக்கான்.
என் தலைவர் எத்தனை வைச்சா என்ன?’’ என்று ஆதரவு குரல் கொடுக்கிறார்கள்.
உருப்பட்ட மாதிரிதான்.
