News

பிரேமலதாவுக்கு ஒண்ணு. திமுகவுடன் காங்கிரஸ் பஞ்சாயத்து ஓவர்.

Follow Us

சங்கீதா விவகாரம் பற்றி எரிகையில் த்ரிஷாவைக் கூட்டிவந்து மேலும் அந்த தீயில் எண்ணெய் ஊற்றினார் விஜய். இந்த நிலையில் நீங்கள் கவலைப்படும் அளவுக்கு சங்கீதா ஒர்த் இல்லை என்று பேசியது அவரது ரசிகைகளை குஷிப்படுத்தியிருக்கிறது. அதேநேரம், பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்துப் பல்வேறு கிசுகிசுக்கள் திட்டமிட்டுப் பரப்பப்பட்டு வந்தன. இது தவெக தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கவலையையும், கோபத்தையும் ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் த்ரிஷாவுடன் கல்யாண வீட்டுக்கு வந்தார் விஜய்.

அதோடு மாமல்லபுரம் மேடையில் விஜய், “என் சொந்த விஷயங்களுக்காக நீங்கள் வருந்த வேண்டாம்; அதை நான் பார்த்துக் கொள்கிறேன். என் சொந்த பிரச்சனைகள் குறித்து கவலைப்படும் அளவுக்கு அவை ஒன்றும் ‘WORTH’ (தகுதியானது) இல்லை” என்று சங்கீதாவை அவமானப்படுத்துவது போல் பேசியிருக்கிறார். இதையும் அவரது ரசிகைகள் வரவேற்றார்கள்.

அதேநேரம் பொதுமக்கள், ‘’விஜய் தனிப்பட்ட நபர் இல்லை. நடிகர், கட்சித் தலைவர். எனவே, விஜய் பேச்சு பல லட்சம் மக்களிடம் தாக்கம் செலுத்துகிறது.  விஜய் தன்னுடைய மனைவிக்கு மட்டும் அல்லாது பொதுச் சமூகத்துக்கும் பதில் சொல்ல கடமைப்பட்டவர். அவர் யாருக்கும் விசுவாசமானவர் இல்லை, நல்லவர் இல்லை என்பதையே அவரது செயலும் பேச்சும் காட்டுகின்றன’’ என்கிறார்கள்.

விஜய் ரசிகர்களை கல்யாணம் முடிக்காதீர்கள். விஜய் ரசிகைகளை கல்யாணம் முடிக்காதீர்கள். அவர்கள் கள்ளக்காதலுக்கு ஆதரவானவர்கள் என்று பலரும் பேசத் தொடங்கியிருப்பது விஜய்க்குச் சிக்கல்தான்.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link