Share via:
விஜய்யிடம் விவாகரத்து கேட்டு ஏற்கெனவே விண்ணப்பம் கொடுத்திருக்கும்
சங்கீதா இன்று மீண்டும் ஒரு மனுவை தாக்கல் செய்திருக்கிறார். தவெக தலைவரும் தனது கணவருமான
விஜய் தன்னை நீலாங்கரை வீட்டுக்குள் அனுமதிக்க மறுக்கிறார் என்று சங்கீதா குற்றச்சாட்டு
எழுப்பியிருக்கிறார்.
ஏற்கெனவே விவாகரத்து கோரி சங்கீதா ஒரு மனு விவாகரத்து கோரி செங்கல்பட்டு
நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். நடிகர் விஜய் வேறு ஒரு நடிகையுடன்
தொடர்பு இருப்பதாகவும், தன்னை மன ரீதியாக கொடுமைப்படுத்தியதாகவும் சங்கீதா மனுவில்
குற்றம் சாட்டி இருந்தார். இதற்கு பதிலடி கொடுப்பது போன்று த்ரிஷாவுடன் திருமண விழாவில்
கலந்துகொண்டார் விஜய்.
இப்போது நாளை மகளிர் தின விழா கொண்டாட்டம் சூடு பிடிக்கும் நிலையில்,
சங்கீதா புதிய மனுவை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் விஜய் தன்னை
நீலாங்கரை வீட்டிற்குள் அனுமதிக்க மறுப்பதாக மனைவி சங்கீதா குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதோடு,
விஜய்யை திருமணம் செய்து 26 வருடங்கள் குடும்பம் நடத்தி 2 குழந்தைகள் பெற்று வளர்த்துள்ளேன்.
விஜய்யை சிறப்பாக கவனித்துக்கொண்டேன். நான் பிரிட்டன் சிட்டிஷன்
என்பதால் சென்னையில் வசிக்க இடம் இல்லாமல் இருக்கிறேன். விவாகரத்து வழக்கு முடியும்
வரை என்னை சென்னை நீலாங்கரை வீட்டில் தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும் என்று வேண்டுகோள்
வைத்திருக்கிறார்.
அச்சச்சோ.
