Share via:
ஜனவரி 21ம் தேதி சேலத்தில் நடைபெற இருக்கும் திமுக இளைஞரணி மாநாட்டுக்கான
சுடர் தொடர் ஓட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை அண்ணாசாலை சிம்சன் சந்திப்பு
அருகே தொடங்கி வைத்தார்.
இளைஞர் அணி மாநாட்டுக்கான எழுச்சிப் பாடலை வெளியிட்டுள்ள உதயநிதி
இன்று சுடர் ஓட்டத்தை தொடங்கிவைத்து, உரையாற்றினார். ‘இந்த சுடர் சென்னை – காஞ்சிபுரம்
– விழுப்புரம் – கள்ளக்குறிச்சி – சேலம் மாவட்ட இளைஞர் அணி தோழர்களால் மாநாடு நடைபெற
இருக்கிற சேலம் பெத்தநாயக்கன்பாளையத்திற்கு கொண்டு சேர்க்கப்படவுள்ளது.
சேலம் மாநாட்டுத்திடலில் வரும் ஜனவரி 20-ஆம் தேதி மாலை இளைஞரணியின்
மாநில துணைச் செயலாளர்களால் என்னிடம் வழங்கப்படவுள்ள மாநாட்டுச் சுடரை, கழகத் தலைவர்
– மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் ஒப்படைக்கவுள்ளேன். கடந்த 9 ஆண்டுகளாக பறிக்கப்பட்ட
நம் மாநில உரிமைகள் அனைத்தையும் மீட்டெடுக்க உறுதியோடு உழைப்போம். இளைஞர் அணி மாநாட்டின்
வெற்றிக்கு சேலத்தை நோக்கி அணிவகுப்போம் – பாசிஸ்ட்டுகளை வீழ்த்துவோம்’ என்று கூறியிருக்கிறார்.
அதன்பிறகு செய்தியாளர்கள் ராமர் கோயில் திறப்பு குறித்து கேட்டபோது,
‘ராமர் கோயில் திறப்பிற்கோ அல்லது மத நம்பிக்கைக்கோ திமுக எதிரி அல்ல என அமைச்சர் உதயநிதி
ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டியதில் திமுகவிற்கு உடன்பாடு
இல்லை’ என்று கூறியுள்ளார்.
இந்த மாநாட்டை வெற்றிகரமாக
உதயநிதி ஸ்டாலின் நடத்திக் காட்டியதும், அவருக்கு துணை முதல்வர் பதவி தரப்பட வேண்டும்
என்று மேடையிலே கோரிக்கை வைக்கப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது. எல்லாமே ஜனநாயக முறைப்படி
செய்ய வேண்டும் என்பதால், கோரிக்கை வைக்கப்பட்டு, அதன்பிறகு ஏற்கப்படலாம் என்று சொல்கிறார்கள்.