Share via:
ஸ்டாலின் குடும்பத்தில் இப்போது உதயநிதி, கனிமொழி இருவரும் தேர்தல்
பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். இவர்களைத் தவிர, நேற்றைய தினம் மனைவியுடன் சபரீசன்
தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்டது சர்ச்சையாகியுள்ளது
வில்லிவாக்கம் தொகுதியில் திமுக சார்பில் கார்த்திக் மோகன் போட்டியிடுகிறார்.
இங்கு தவெக சார்பில் ஆதவ் அர்ஜூனா போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் விஜயகுமார் போட்டியிடுகிறார்.
மூன்று பேருமே வில்லிவாக்கம் தொகுதி முழுவதும் தீவிரப்பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
கார்த்திக் மோகன் நேற்றைய தினம் வில்லிவாக்கம் தொகுதிக்குட்பட்ட
நல்வாழ்வு சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நேற்று கலந்துரையாடினார். இந்தக் கூட்டத்தில்
அமைச்சர் சேகர்பாபு, முதல்வன் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை, அவரது கணவர் சபரீசன்
ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தகூட்டத்தில் சபரீசன் பேசும் போது, வில்லிவாக்கத்தில் போட்டியிடும்
கார்த்திக், ‘’இங்கு போட்டியிடுவது என் நண்பர்.. நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.
அவரை வெற்றி பெறச் செய்தால், உங்கள் தொகுதிக்கு என்னென்ன தேவையோ அனைத்தையும் அவர் செய்து
கொடுப்பார்.. அதற்கு நான் கியாரன்டி’’ என வாக்குறுதி அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பதில்அளித்த சபரீசன், ’’நாங்கள் எண்ணற்ற
திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம். எனவே மிகுந்த நம்பிக்கையுடன் தேர்தல் களத்தைச்
சந்தித்துள்ளோம். தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் ஆதரவு சிறப்பாக
இருக்கிறது. மீண்டும் தி.மு.க. ஆட்சிதான் அமையும். 100 சதவீதம் தனிப்பெரும்பான்மையுடன்
தி.மு.க. ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இந்தத் தேர்தலில்
விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது. 2 தொகுதிகளில்
போட்டியிடுவது என்பது அந்தத் தலைவரின் தன்னம்பிக்கையின்மையைக் காட்டுகிறது” என்று
கூறினார்.
இந்தத் தேர்தலில் சபரீசன் நேரடி அரசியல் களத்தில் இறங்கியது பரபரப்பை
ஏற்படுத்தி உள்ளது. அப்படியென்றால் அடுத்து வரப்போவது துர்காவா என்ற கேள்வி எழுந்துள்ளது.
