கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போர், இரண்டரை ஆண்டுகளை கடந்தும் தொடர்கிறது.

 

இதில் இரு தரப்பும் பேச்சு  வார்த்தையில் ஈடுபட்டு அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன .

 

இதை தொடர்ந்து  இரு நாடுகளுக்கு இடையிலான மோதல் தொடர்கிறது. இந்த சூழலில், உக்ரைன் மீது நேற்று திடீர் வான்வழித் தாக்குதலை ரஷ்யா நடத்தியது. ஒரே நேரத்தில் 120 ஏவுகணைகள், 90 ‘ட்ரோன்’கள் வீசப்பட்டதால், உக்ரைன் மக்கள் அச்சத்தில் உள்ளனர் .

 

தலைநகர் கீவ் கொண்ட  முக்கிய நகரங்களான வொலைன், மைகொலைவ், ஜபோரிச்சியா, துறைமுக நகரமான ஒடேசா உள்ளிட்ட பகுதிகளில் குண்டு மழை பொழிந்தது .

 

அதை தொடர்ந்து முக்கிய ஏரிசக்தி உள்கட்டமைப்புகளை குறிவைத்து  ஏவுகணைகளை ரஷ்யா வீசியுள்ளது .கடத்த 3 மாதங்களில் இல்லாத அளவிற்க்கு நடத்தப்பட்ட மிகப்பெரிய  தாக்குதல் , அந்நாட்டு எரிசக்தி கட்டமைப்புகள் சேதமடைந்து முக்கிய நகரங்களில் மின்தடை ஏற்பட்டது.

 

இதில் 100க்கு மேற்பட்டோர் வானிலேயே அழிக்கப்பட்டன . மைகொலைவ் நகரில் இருவரும் , ஒடேசா பகுதியில் இருவரும் உயிரிழந்துள்ளனர் . இதில் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் காயம்மடைந்துள்ளனர்.

இதனால் ரஷ்யா மிகப்பெரிய வான்வழி தாக்குதலை உக்ரைன் மீது நடந்தியத்தை  தொடர்ந்து , இரு தரப்பிலும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது  .

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link