Share via:
லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்டு வரும் நடிகை நயன்தாராவின் அசுர வேக வளர்ச்சி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ்த்திரையுலகில் 20 வருடங்களை தாண்டியும் நடிகை நயன்தாரா கதாநாயகியாக தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் திருமணம், இரட்டை குழந்தைகளுக்கு தாய் என பிசியான வாழ்க்கையை வாழ்ந்து வரும் நயன்தாரா குறித்து தற்போது கிடைத்துள்ள தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு திரைப்படத்தில் நடிக்க நயன்தாரா ரூ.5 கோடி முதல் ரூ.10 கோடி வரை சம்பளம் வாங்கி வரும் நிலையில், விளம்பர படம் ஒன்றில் 50 வினாடிகள் நடிக்க ரூ.5 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.
நயன்தாராவின் சொத்து மதிப்பு ரூ.200 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், சினிமா, பல்வேறு தொழில்களில் அதிகளவில் வருமானம் ஈட்டி வருகிறார். சென்னையில் இவர் புதிதாக கட்டியுள்ள சொகுசு வீட்டில் பிரத்யேகமான திரையரங்கு, நீச்சல் குளம், ஜிம் போன்ற வசதிகள் உள்ள நிலையில் வெளி மாநிலங்களிலும் அதிகளவு சொத்துகளை வாங்கி குவித்து வருகிறார் நயன்தாரா.
சமீபத்தில் ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில் பாலிவுட்டிலும் நயன்தாராவின் மவுசு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

