Share via:
திருவண்ணாமலை மாவட்டம் வ.உ.சி நகர் 11வது தெருவில் நேற்று மாலை
நிலச்சரிவு ஏற்பட்டு பல வீடுகள் இடிபாடுகளுக்குள் புதைந்துள்ளன. மண் சரிவின் காரணமாக
பாறைகள் உருண்டு விழுந்ததில் 3 வீடுகளுக்குள் 24 மணி நேரத்திற்கும் மேலாக சிக்கித்
தவித்த 7 பேரும் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுக்க பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த நிலச்சரிவில் சிக்கி கவுதம், இனியா, மகா, வினோதினி, ரம்யா
என 5 குழந்தைகள் மற்றும் ராஜ்குமார் – மீனா தம்பதி என மொத்தம் 7 பேர் மண்ணுக்குள் புதையுண்ட
நிலையில் அவர்களை மீட்பதற்கு கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளாப்பட்டன. ஆனாலும், அவர்கள் 7 பேரும் உயிரிழந்து மீட்கப்பட்டுள்ள தகவல்
பேரதிர்ச்சியாக உள்ளது.
அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் திராவிட மாடல் முன்னேறிவிட்டதாக
பெருமிதப்படும் வேளையில், மண் சரிவில் சிக்கியவர்களை உடனடியாக மீட்க முடியவில்லை என்பது
மிகவும் வேதனை அளிக்கிறது. இதுபோன்ற சூழலில் மனித உயிரிழப்புகள் நிகழாமல் தடுப்பதற்கான
உத்திகளை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வகுக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இந்த மரணத்திற்கு 5 லட்சம் ரூபாய்
நிதி அளித்திருப்பது சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு
10 லட்சம் ரூபாய் நிவாரணம் கொடுத்த தி.மு.க. அரசு நிலச்சரிவில் புதையுண்டு இறந்தவர்களுக்க்கு
5 லட்சம் கொடுத்து அவமானம் செய்வது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் வீட்டுக்கு வீடு 25 ஆயிரம் ரூபாய் உடனடியாக நிவாரணம்
வழங்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அண்டையில் இருக்கும் புதுவையில் 5000 ரூபாய்
வழங்குவதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்திருப்பது போன்று முதல்வர் ஸ்டாலினும் உடனடியாக
அறிவிக்க வேண்டும் என்கிறார்கள். பிரதமரிடம் போன் மூலம் பேசியிருக்கும் ஸ்டாலின் இன்று
அறிவிப்பு வெளியிடுவாரா..? மழையில் பாதுகாக்காத மக்களை நிவாரணம் கொடுத்தாவது மீட்க
வேண்டியது அரசின் கடமை.
மழை நின்ற பிறகும் திருவண்ணாமலை மலை பகுதிகலில் கிட்டத்தட்ட
2000 அடிகளுக்கு மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதே அளவு சரிவு நகர்பகுதியில் நடந்திருந்தால்
கற்பனைக்கெட்டாத உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டிருக்கும் என்று அதிர்ச்சி கூட்டுகிறார்கள்.