News

மோடியை வரவேற்பாரா செங்கோட்டையன்..? எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி

Follow Us

முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த 2024ம் ஆண்டு சாலை விபத்து மரணங்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது. திட்டமிட்டு செயலாற்றி வருவதால், வரும் ஆண்டுகளில் விபத்துகள் இல்லாத தமிழகம் என்ற இலக்கை நோக்கி நகர்வதாக தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உறுதி அளித்திருக்கிறார்.

இதுதொடர்பாக டி.ஜி.பி சங்கர் ஜிவால் விடுத்திருக்கும் அறிக்கையில், “மக்கள் தொகை அதிகரிப்பு, வாகனங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற சவால்கள் தொடர்ந்து இருந்தாலும் தமிழகம் முழுவதும் விபத்துகளை குறைப்பதற்காக பல்வேறு ஆக்கபூர்வ நடவக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விபத்துகளைக் குறைக்கவும், உயிர்ப்பலி ஏற்படாமல் தடுப்பதற்கும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் கண்காணிப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன். சாலை விதிகளை மீறுபவர்கள், கண்மூடித்தனமான வேகத்தில் வண்டி ஓட்டுபவர்கள், அறியாமையால் விதிகளை மீறுபவர்களைக் கண்டறிந்து அபராதம் விதிக்கப்பட்டு எச்சரிக்கை செய்யப்படுகின்றனர். மேலும், விபத்துப் பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அந்த பகுதிகளில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படுகின்றன.

இந்த நடவடிக்கைகள் கடந்த ஆண்டு நல்ல பலன் அளித்துள்ளன. முந்தைய 2023ம் ஆண்டு 17,526 விபத்துகள் ஏற்பட்டு 18,347 பேர் உயிர் இழந்தார்கள். தொடர் நடவடிக்கை காரணமாக கடந்த 2024ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 17,282 விபத்துகளாகக் குறைந்து, உயிர்ப் பலியும் 18,074 என்ற எண்ணிக்கையிலே நிகழ்ந்துள்ளது. ஒரே ஆண்டில் 273 எண்ணிக்கை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்க முன்னேற்றம்.  

இதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கடந்த 2023ம் ஆண்டு நடந்த விபத்துகளில் கிட்டத்தட்ட 16,800 விபத்துகளுக்கு டிரைவர்களின் தவறுகளே காரணம் என்று கண்டறியப்பட்டது. இதையடுத்து ஹைவேய் பேட்ரோல் மொபைல் ஆப் உருவாக்கப்பட்டு விபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. அதோடு விபத்து நடப்பதற்கு அதிகம் வாய்ப்புள்ள 6,165 பகுதிகள் கண்டறியப்பட்டன. இந்த பகுதியின் சாலைகள் தரம், சாலைப் போக்குவரத்து அடர்த்தி, சுற்றுப்புற மக்களின் எண்ணிக்கை, விபத்து நடக்கும் விதம் போன்ற எல்லாமே ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதன் அடிப்படையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மாநில ஹைவேய்ஸ் துறை மூலம் இணைந்து மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி அடிக்கடி விபத்துகள் ஏற்படும் 6,165 இடங்களில் இருந்து 3,165 இடங்களில் வாகனங்களின் வேகத்தைக் குறைப்பதற்கு உடனடி பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் விபத்துகள் பெருமளவு குறைந்துள்ளது.

கோயம்புத்தூரில் புதிதாக அறிமுகப்படுத்திய யு டர்ன் நடைமுறையின் காரணமாக கிட்டத்தட்ட 4% விபத்துகள் குறைந்தன. எனவே சிக்னலுக்குப் பதிலாக யு டர்ன் நடைமுறை பல இடங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் சாலையில் போக்குவரத்து நெரிசல், காத்திருப்பு நேரம் கணிசமாகக் குறைந்துள்ளது. இது போன்ற நடைமுறை மற்ற நகரங்களிலும் மேற்கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டு சாலை விதிமீறலுக்கு 12.58 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் 2.07 லட்சம் வழக்குகள் ஓவர் ஸ்பீடு, 2.58 லட்சம் சிக்னல் விதி மீறல், 4.20 லட்சம் வழக்குகள் செல்போன் பேசிக்கொண்டு ஓட்டியது ஆகும். அதோடு 12,306 பேர் மீது குடித்துவிட்டு வண்டி ஓட்டியதற்கும் வழக்கு பதியப்பட்டுள்ளது. இது தவிர 64.94 லட்சம் பேர் மீது ஹெல்மட் போடாததற்கும் 5.78 லட்சம் பேர் மீது சீட் பெல்ட் அணியாததற்கும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மோட்டார் வாகன சட்டத்தை மீறி வாகனம் ஓட்டிய 3.49 லட்சம் பேருடைய லைசென்ஸ் பறிமுதல் செய்வதற்கு போக்குவரத்துத் துறைக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் 2024ம் ஆண்டு மட்டும் 80,558 பேருடைய லைசென்ஸ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஹைவேய் பேட்ரோல் மூலம் விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையிலிருந்த 12,629 பேர் மீட்கப்பட்டு கோல்டன் ஹவர் என்று சொல்லப்படும் சரியான நேரத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து இல்லாத தமிழகம் என்ற இலக்கை நோக்கி நகர்கிறோம்’’ என்று தெரிவித்தார்.

அப்படியே நடக்கட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link