Share via:
ஜராத்தில் மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் பைக் மற்றும் லாரியில் சென்ற 10 பேர் துரிதமாக மீட்கப்பட்டதால் அசம்பாவிதங்கள் தடுக்கப்பட்டது.
குஜராத் மாநிலம் சுரேந்திரநாத் மாவட்டம் வஸ்தாதி பகுதியில் 40 ஆண்டுகாலம் பழமை வாய்ந்த ஆற்றுப்பாலம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பாலத்தை பயன்படுத்தி தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருவது வழக்கம்.
அதேபோல் நேற்று மாலையும் இந்த பாலத்தில் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து சென்றது. அப்போது திடீரென்று யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பாலம் இடிந்து விழுந்தது.
இரண்டு துண்டாக பாலம் உடைந்ததில் பாலத்தின் மீது பயணித்துக் கொண்டிருந்த குப்பை ஏற்றிச் செல்லும் லாரி மற்றும் இருசக்கர வாகனங்கள் ஆற்றில் விழுந்தன. அதில் பயணித்துக் கொண்டிருந்தவர்களும் ஆற்று நீரில் மூழ்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் துரிதமாக செயல்பட்டு மீட்புப்படையினருக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
அதன்பின்னர் மீட்புப்படையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்த ஆற்றில் விழுந்த 10 பேரை பத்திரமாக மீட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் சில மணிநேரம் அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது குறிப்பிடத்தக்கது.