Share via:
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மேற்படிப்புக்காக லண்டன் சென்றுள்ள
நிலையில், அவர் அங்கிருந்தபடியே கட்சிப் பணிகளை மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால், திடீர் திருப்பமாக ஹெச்.ராஜா தலைமையில் அண்ணாமலை பணிகளைக் கவனிக்க ஒரு குழு
அமைக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.க.வின் தேசிய பொதுச்செயலாளர் அருண்சிங் வெளியிட்டிருக்கும் அறிவிப்பின் படி அண்ணாமலையின்
பணிகளை கவனிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் முதல் பெயராக ஹெச்.ராஜா
பெயர் இடம் பெற்றுள்ளது. அண்ணாமலையினால் அடக்கி வைக்கப்பட்டிருந்த ஹெச்.ராஜாவுக்கு
மீண்டும் புரமோஷன் கிடைத்திருக்கிறது பெரும் ஆச்சர்யத்தை உருவாக்கியிருக்கிறது.
மேலும் இந்த குழுவில் சக்கரவர்த்தி, ராமசீனிவாசன், எஸ்.ஆர்.சேகர்,
முருகானந்தம், கனகசபாபதி அடங்கிய 6 பேர் இருக்கிறார்கள். இந்த குழுவில் பதவியை எதிர்பார்த்துக்
காத்திருக்கும் தமிழிசை செளந்தரராஜன் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார். அதோடு அண்ணாமலையின்
தீவிர ஆதரவாளரான கரு.நாகராஜனும் புறக்கணிப்பு செய்யப்பட்டிருக்கிறார்.
இந்த பட்டியலில் இருக்கும் அனைவருமே அண்ணாமலையிடம் நேரடியாக மோதுபவர்கள்
இல்லை என்றாலும் அவர் மீது வருத்தத்தில் இருந்தவர்கள். அவர்கள் வசம் கட்சி போயிருப்பதால்
பா.ஜ.க.வில் மாற்றம் வரப்போகிறது என்கிறார்கள். அண்ணாமலை வார் ரூம் இதனை எப்படி எடுத்துக்கொள்கிறது
என்று பார்க்கலாம்.