Share via:
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் பதவிக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர அவரது சொந்த கட்சியைச் சேர்ந்த எம்.பி.யே கடிதம் கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து நாட்டில் கன்சர்வேடிவ் கட்சி ஆட்சி நடத்தி வரும் நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷிசுனக் பிரதமராக இருந்து வருகிறார். இங்கிலாந்தில் நிலவி வரும் பல்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வுகளை ரிஷிசுனக் திறமையாக கையாண்டு வருகிறார் என்ற கருத்து நிலவி வருகிறது.
இதற்கிடையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உள்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த சுயல்லா பிரேவர்மேன் சில சர்ச்சை கருத்துகளை தெரிவித்ததால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த ஆண்ட்ரியா ஜென்கின்ஸ், ரிஷி சுனக்கிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது குறித்த கடிதத்தை கொடுத்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஆண்ட்ரியா ஜென்கின்ஸ் இங்கிலாந்து முன்னாள் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சனின் தீவிர ஆதரவாளர் என்பதால், ரிஷி சுனக்கிற்கும் அவருக்கும் இடையில் பல்வேறு சிக்கல்கள் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
ரிஷி சுனக் இங்கிலாந்து நாட்டின் பிரதமராக பதவியேற்பதில் விருப்பமில்லாத ஆண்ட்ரியா ஜென்கின்ஸ். சரியான நேரத்திற்காக காத்துக் கொண்டிருந்தார். இந்த சமயத்தில்தான் ரிஷிசுனக்கை பதவியில் இருந்து நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக உண்மையான கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் ஒருவரை பிரதமராய நியமிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது சர்வதேச நாடுகள் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது