Share via:
ஒன்பிளஸ் நிறுவனத்தின் மடக்கக்கூடிய (ஃபோல்டபில்) ஸ்மார்ட்போன், ‘ஒன்பிளஸ் ஓபன்’ என்ற பெயரில் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போதைய காலகட்டத்தில் புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவதில் மக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் சந்தையில் அறிமுகம் செய்யப்படும் புதிய மொபைல் போன்கள் குறித்த தேடலும், கொள்முதலும் அதிகரித்து வருகிறது.
இந்த மாதம் அறிமுகமாகும் என்று கூறப்படும் ஒன்பிளஸ் ஓபன் ஸ்மார்ட் போனின் விலை மற்றும் பிரஸ் டெண்டர்கள் வெளியாகி உளளன. ஒன்பிளஸ் மாடல் 31 பாகங்கள் குறைவாக உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் இதன் எடை மிகவும் குறைவாக இருக்கும். அதேபோல் இது ஓப்போ பைண்ட் என்2 மாடலை விட 37 சதவீதம் அளவுக்கு சிறியதாக இருக்கும் என்று ஏற்கனவே அந்நிறுவனம் தகவல் வெளியிட்டது.
வருகிற 19ம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ள ஒன்பிளஸ் ஓபன் மாடலின் சிறப்பம்சங்கள் குறித்து இங்கு காண்போம்.
இந்த ஸ்மார்ட் போனில் 48எம்.பி. பிரைமரி கேமராவும், 48எம்.பி. அல்ட்ரா வைடு கேமராவும், 64 எம்பி டெலிபோட்டோ கேமராவும், ஹேசில்பிலாட் பிராண்டிங்கும் இருப்பதாக கூறப்படுகிறது. 7.8 இன்ச் போல்டபில் எல்.இ.டி. டிஸ்ப்ளே கொண்ட இதில் 6.31 இன்ச் வெளிப்புற எல்.இ.டி. டிஸ்பிளேயும் கொண்டுள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசசர், 16ஜி.பி. ரேம் மற்றும் 256 ஜி.பி. மெமரி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கொண்டதாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் விலை 1699 டாலர்கள் ஆகும். இந்திய மதிப்பில் இதன் விலை ரூ.1 லட்சத்து 41 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

