News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

இந்திய பணக்காரர்கள் பட்டியலில் தொழில் அதிபர் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, கௌதம் அதானியை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளார்.


இந்திய பணக்காரர்கள் பட்டியலை ஹுரன் இந்தியா மற்றும் 360 ஒன் வெல்த் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்திய பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளன.


அந்தபட்டியலின் படி ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி ரூ.8.08 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் முதல் இடம் பிடித்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு ரூ.1.65 லட்சம் கோடியாக இருந்த இவரின் சொத்து மதிப்பு 9 ஆண்டுகளில் 4 மடங்காக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேபோல் ரூ.4.74 லட்சம் கோடியாக சொத்து மதிப்பு குறைந்துள்ள அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி 2ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இதற்கு காரணம் பங்குசந்தை முறைகேடு தொடர்பான ஹிண்டன்பெர்க் அறிக்கை வெளியீடுதான்.


அதற்கு அடுத்தபடியாக ரூ.2.78 லட்சம் கோடியுடன் சீரம் நிறுவன தலைவர் சைரஸ் பூனவாலா 3ம் இடத்திலும், ரூ.2.29 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் ஹெச்சிஎல் நிறுவனர் ஷிவ்நாடார் 4ம் இடத்திலும் உள்ளனர்.


ரூ.1.76 லட்சம் கோடியுடன் தொழில் அதிபர் கோபிசந்த் இந்துஜா 5ம் இடத்திலும், ரூ.1.64 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் சன்பார்மா தலைவர் திலீப் சங்வி 6ம் இடத்தையும் பிடித்துள்ளனர்.


7ம் இடத்தில் தொழிலதிபர் லட்சுமி மிட்டல் ரூ.1.62 லட்சம் கோடியுடனும், ரூ.1.44 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் ராதாகிஷன் தமனி 8ம் இடத்திலும், ஆதித்யா பிர்லா குழுமத் தலைவர் குமார் மங்கலம் 9ம் இடத்தை பிடித்துள்ள நிலையில், தொழில் அதிபர் நீரஜ் பஜாஜ் 10ம் இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link