Share via:
தென் மாவட்டங்களில் 2நாட்களுக்கு கனமழை தொடரும் எனவும் ரெட் அலர்ட் என்றும் தென் மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால், தென் மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் குமரி மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.
தொடர் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக குளங்கள் மற்றும் கால்வாய்கள் நிரம்பி வழிகின்றன. மேலும் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் அதிகமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் குளங்கள், கால்வாய்கள் நிரம்பி வழிந்து வருகிறது.
இந்நிலையில் தென் மண்டல வானிலை ஆய்வுமைய தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்ளை சந்தித்து பேசும்போது, ‘‘தற்போது ஏற்பட்டுள்ள கனமழை மட்டுமே மேகவெடிப்பு கிடையாது. வளிமண்டல சுழற்சியே இந்த கனமழைக்கு காரணம் என்று தெரிவித்துள்ளார். ஆனால் வளிமண்டல சுழற்சியில் இதுவரை இந்த அளவிற்கு மழை பெய்தது கிடையாது என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் தற்போது வரை பெய்துள்ள மழை இயல்பை விட 5 சதவீதம் அதிகமாக உள்ளது என்று பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து நெல்லை, குமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ரெட் அலர்ட் இன்னும் 2 நாட்களுக்கு தொடரும். அதேபோல் பாளையங்கோட்டையில் வரலாறு காணாத பெருமழை பெய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அடுத்து வரும் 2 நாட்களுக்கு பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் குமரிக்கடல், தென் மாவட்டம் மற்றும் மன்னார்வளைகுடா பகுதிகளில் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.