Share via:
கங்கனா ரனாவத் மட்டுமே பா.ஜ.க.வுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்துவரும்
நிலையில், திடீரென நடிகை ராஷ்மிகா மந்தனா களத்தில் இறங்கி பரபரப்பு கிளப்பியிருக்கிறார்.
கண்ணைத் திறந்து பாருங்க, இந்தியா எத்தனை பெரிய வளர்ச்சி அடைஞ்சிருக்கு. கார் போறதுக்கு
எப்படியெல்லாம் பாதை போட்டிருக்காங்க என்று புளங்காகிதம் அடைந்து பேசும் வீடியோ வெளியாகியிருக்கிறது.
இதையடுத்து பா.ஜ.க.வினர் படு குஷியாகியிருக்கிறார்கள். ஒரு நடிகைக்குத்
தெரிந்தது கூட மக்களுக்குத் தெரியவில்லை. ராஷ்மிகா சொல்வதைக் கேட்டு ஓட்டுப் போடுங்கள்
என்று பேசி வருகிறார்கள்.
அதேநேரம் காங்கிரஸ் கட்சியினரோ, ‘கடந்த ஜனவரி மாதம் ராஷ்மிகா மந்தனாவுக்கு
ஐ.டி. ரெய்டு நடந்தது. அப்போதே இதற்கான ஒப்பந்தம் போடப்பட்டு, அதுவே இப்போது ஆதரவாக
வெளி வந்திருக்கிறது. மிரட்டி ஆதரிக்க வைத்திருக்கிறார்கள்’ என்று குற்றம் சாட்டுகிறார்கள்.
அதோடு, ’மோடி நிலைமை இவ்ளோ கேவலமா போச்சு.ஒரு படித்த மேதை அல்லது
பொருளாதார அறிஞர் அல்லது ஒரு விஞ்ஞானி ஒருவர் மோடி ஆட்சியை பாராட்டி சர்டிஃபிகேட் கொடுத்தால்
நன்றாக இருக்கும். ஒரு நடிகை கொடுக்கும் சர்டிஃபிகேட்டை முக்கியமாக நினைக்கிறார்களே…
அதுசரி, ஒரு நடிகனை பற்றி நடிகைக்கு தானே தெரியும்…’’ என்று கிண்டலடிக்கிறார்கள்.