News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

தலித் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் அவரின் உடலை 3 துண்டுகளாக வெட்டி வீசிய சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தலித் பெண்கள் தங்களின் உயிரையும் மானத்தையும் காப்பாற்றிக் கொண்டு பயந்து பயந்து வாழும் சம்பவம் உத்தரபிரதேசத்தில் அதிகரித்துள்ளது. தற்போது நடந்துள்ள கோர சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.


உத்தரபிரதேச மாநித்தில் அமைந்துள்ள பண்டா  கிராமம். இங்கு ராஜ்குமார் சுக்லா என்பவரின் வீட்டில் 40 வயதான தலித் பெண் ஒருவர் வீட்டு வேலை செய்து வந்துள்ளார். அந்த பெண்ணின 20 வயது மகள், ராஜ்குமார் சுக்லாவின் வீட்டிற்கு தாயை காண சென்ற போது அறை ஒன்றில் அலறல் சத்தம் கேட்டுள்ளது. அங்கு போய் மார்த்த இளம்பெண், தனது தாயின் உடல் 3 துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.


இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் முதல் கட்ட விசாரணை நடத்தி முடித்த நிலையில், ராஜ்குமார்சுக்லா, அவரது சகோதரர் பவா சுக்லா மற்றும் ராமகிருஷ்ணா சுக்லா ஆகிய 3 பேரும் தலைமறைவானது தெரியவந்துள்ளது. இவர்கள் 3 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


இந்த கோர சம்பவம் குறித்து சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறும்போது, ‘‘தலித் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. உத்தரபிரதேசத்தில் பெண்கள் அச்சத்துடனும், கோபத்துடனும் உள்ளனர்’’ என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link