News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

அதிமுக மற்றும் திமுகவில் டாக்டர் ராமதாஸ்க்கு கதவுகள் அடைக்கப்பட்டுவிட்டதால், வரும் 2026 தேர்தலில் அவர் புதிய முடிவு ஒன்று எடுக்கப்போவதாகத் தெரியவந்துள்ளது.

டாக்டர் ராமதாஸ் முதல் தேர்வு அதிமுகதான். அங்கு அன்பணி ராமதாஸ் இணைந்தாலும், அவருக்கு கொடுக்கப்படும் அதே அளவு தொகுதிகள் தங்களுக்கும் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதற்கு வாய்ப்பே இல்லை என்று அதிமுக கதவை அடைத்துவிட்டது.  

இதையடுத்து திமுக கூட்டணியில் இணைவதற்கு ஜெகத்ரட்சகன் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இங்கேயும் அன்புமணிக்கு வழங்கப்பட்ட அளவுக்கு குறைந்தது இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் வேண்டும் என ராமதாஸ் தரப்பு வலியுறுத்தியது. திமுக தரப்பில் அதிகபட்சமாக 4 முதல் 5 தொகுதிகள் மட்டுமே வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திமுக கூட்டணிக்கான கதவு முற்றிலும் மூடப்பட்டது.
அதேநேரம், மீதமிருக்கும் ஒரே வாய்ப்பான விஜய் கட்சியுடன் கூட்டணி வைப்பதற்கு டாக்டர் ராமதாஸ் விரும்பவில்லை. அதேநேரம், தன்னுடைய பலத்தைக் காட்டும் வகையில் வட மாவட்டங்களில் மட்டும் 30 தொகுதிகளில் ராமதாஸ் தரப்பு தனித்துப் போட்டியிடவுள்ளது.

வட மாவட்டங்களில் அதிமுக கூட்டணி குறிப்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் எல்லாம் தன்னுடைய வேட்பாளர்களை களம் இறக்குவது தான் ராமதாஸின் திட்டம் என்று சொல்கிறார்கள். இந்த திட்டம் திமுகவுக்கு சாதகமானது என்பதால், இந்த தொகுதிகளில் ஏற்படும் செலவுகளை திமுகவே பார்த்துக்கொள்ளும் என்று பேசப்பட்டுள்ளதாம்.

இப்படியொரு முயற்சி மேற்கொண்டால் தேஜக கூட்டணிக்கு வட மாவட்டங்களில் நிச்சயம் ஆபத்து வரும். எனவே, பாஜக சார்பில் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கியிருக்கிறார்களாம்.

தேர்தல் மோதல் களை கட்டுகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link