Share via:
அப்பாவுக்கும் மகனுக்கும் இடையிலான சண்டை உச்சம் அடைந்திருக்கும் நிலையில், டாக்டர் ராமதாஸ் இப்போது வெள்ளைக் கொடி காட்டி அதிமுக கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. அதேநேரம், அன்புமணி எம்.பி.யாகியிருக்கும் சூழலில் செளமியா அன்புமணி எம்.எல்.ஏவாக போட்டியிடுவது உறுதியாகியிருக்கிறது.
இதுகுறித்துப் பேசும் ராமதாஸ் ஆதரவாளர்கள், ‘’அன்புமணி தரப்பு பாமக, என்டிஏ கூட்டணியில் இணைந்துவிட்டது. ராமதாஸ் தரப்பு திமுகவுடன் இணைய ஆர்வம் காட்டி வந்தது. ஆனால் திருமாவளவன் எதிர்ப்பு காரணமாக, ராமதாஸை கூட்டணிக்குள் சேர்க்க திமுக தயங்கியது. தவிர, ஏற்கனவே, தி.மு.க.வில் தே.மு.தி.க. இணைந்து விட்டதால், ராமதாஸுக்கு வாய்ப்பில்லை. ஜூனியரான விஜய்யுடன் கைகோர்க்க ராமதாஸ் தயங்கி வருகிறார்.
இந்த சூழலை பயன்படுத்தி பாஜக ராமதாஸ் தரப்புடன் பேசி வருகிறது. ஆரம்பத்தில் பிடி கொடுக்காத ராமதாஸ் இப்போது இறங்கிவந்துள்ளார். நாங்கள் கூட்டணிக்கு வர வேண்டுமென்றால் மாம்பழம் சின்னத்தில் எங்கள் வேட்பாளர்கள் போட்டியிட சம்மதிக்க வேண்டும். ஸ்ரீகாந்தி, ஜிகே மணி மற்றும் அருள் உள்ளிட்ட 5 பேருக்கு சீட் வேண்டும் என்றும் கேட்டார். இதற்கு பாஜக தரப்பு சம்மதம் தெரிவித்துவிட்டது. ஆகவே, விரைவில் அறிவிப்பு வரும்’’ என்றார்கள்.
அதேபோல் அன்புமணி ஆதரவாளர்கள், ‘’டாக்டர் ராமதாஸ்க்கு வேறு ஆப்ஷன் இல்லை என்பதால் தேஜகூட்டணிக்குள் வருகிறார். இதன் அர்த்தம் அன்புமணி தலைமையை ஏற்றுக்கொள்கிறார் என்பதுதான். அதோடு, இந்த தேர்தலில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம் அல்லது பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றத் தொகுதியில் செளமியா போட்டியிட விரும்புகிறார். எல்லாமே அன்புமணி ஆசைப்படியே நடக்கிறது’ என்கிறார்கள்.
பார்க்கலாம்.