Share via:
மகன் அன்புமணியால் கட்சியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட பாமக
நிறுவனர் ராமதாஸ் இப்போது சசிகலாவுடன் இணைந்து தேர்தலை சந்தித்து வருகிறார். பரப்புரையில்
அவர் மயங்கிவிழுந்திருப்பது பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
நேற்று சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதியில் பாமக நிறுவனர் மருத்துவர்
ராமதாஸ் கலந்துகொண்டு பரப்பரை செய்தார் சுமார் 15 நிமிடம் அவர் வேட்பாளருக்கு ஆதரவாக
சேரில் அமர்ந்தப்படியே பரப்புரை மேற்கொண்டார்.
அதன் பிறகு தனது பேச்சை முடித்துவிட்டு மேடையில் இருந்து கிளம்பும்
போது திடீரென மயக்கம் அடைந்தார். உடனடியாக அவரை பாமக நிர்வாகிகள் தூக்கிச் சென்று தயார்
நிலையில் இருந்த ஆம்புலன்சில் படுக்க வைத்து தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
50 வருடங்களுக்கு மேல் அரசியலில் இருக்கிறார். 86 வயதில் மயக்கம்
வரும் வரை மேடையில் நிற்கிறார். அவருடன் அவரது மகள் ஸ்ரீகாந்தி, வேட்பாளர் அருள் உள்ளிட்டோர்
மருத்துவமனைக்குச் சென்றனர். இப்போது ராமதாஸ் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம், சுற்றுப்பயணத்தில் கலந்துகொள்வாரா என்பது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை.
இந்த தகவல் அன்புமணிக்குத் தெரிவிக்கப்பட்டதாம். அதற்கு அவர்,
‘நல்லா டிராமா போடுவார், கண்டுக்காதீங்க’ என்று சொல்லிவிட்டாராம்.
ரத்த பாசம்.
