Share via:
நாடு முழுவதும் பால ராமர் பிராண பிரதிஷ்டை கோலாகலமாக கொண்டாடப்பட்டு
வருகிறது. தமிழகத்தின் முக்கிய வி.ஐ.பி.கள் அனைவரும் அயோத்திக்கு புறப்பட்டுச் சென்றுள்ள
நிலையில், இன்று தமிழக கவர்னர் ஆர்.என். ரவி சென்னை, மேற்கு மாம்பலத்தில் இருக்கும்
கோதண்டராமர் கோயிலுக்குச் சென்று வழிபட்டார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள அறிக்கையில், ‘அனைவரும்
நலம் பெற வேண்டும் என்று பிரபு ஸ்ரீராமரிடம் பிரார்த்தனை செய்தேன். மேற்கு மாம்பலத்தில்
இருக்கும் கோதண்டராமர் கோயில் அறநிலையத்துறையின் கீழ் உள்ளது.
இங்குள்ள பூசாரிகள் மற்றும் கோயில் ஊழியர்கள் முகத்தில் கண்ணுக்குத்
தெரியாத அச்சம் மற்றும் பயம் இருப்பதை பார்க்க முடிந்தது. இது, நாட்டின் பிற பகுதிகளில்
கொண்டாடப்படும் பண்டிக்கைக்கு முற்றிலும் மாறுபட்டது. இது, இந்த கோயில் கடுமையான அடக்குமுறையின்
உணர்வைக் காட்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆக, ராமர் கோயில் பிரச்னையை தொடங்கிவைத்திருக்கிறார் கவர்னர் ஆர்.என்.ரவி.
அடுத்து என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ..?