Share via:
சூப்பர்ஸ்டார் விவகாரத்தில்
ரஜினிக்கும் விஜய்க்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டது. ரஜினி ரசிகர்களும் விஜய் ரசிகர்களும்
சமூகவலைதளத்தில் கடுமையாக மோதிக்கொண்டார்கள். ஆனால், விஜய் கட்சி தொடங்கிய நேரத்தில்
பெருந்தன்மையுடன் வாழ்த்து தெரிவித்தார். அதனை விஜய் பொருட்படுத்தவில்லை.
இந்த நிலையில் இன்று
சீமான் சூப்பர்ஸ்டார் ரஜினியை சந்தித்துப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும்பரபரப்பை
உண்டாக்கியுள்ளது. ஏனென்றால், ரஜினி அரசியலுக்கு வருவதாக சொன்ன நேரத்தில் சீமான் கடுமையாக
எதிர்ப்பு தெரிவித்தார். யார் வேண்டுமானாலும் இங்கு வாழலாம் ஆனால், எங்களை ஆள வேண்டும்
என்றால் அவர் எங்கள் ரத்தமாக இருக்க வேண்டும் என்று கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.
இதை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியினர் ரஜினியை கன்னாபின்னாவென்று அசிங்கமாக கிண்டல்
செய்தனர். ஆனால், ரஜினிகாந்த் எதற்கும் பதில் சொல்லவே இல்லை.
விஜய்க்கு எதிர்
மனநிலையில் இருக்கும் ரஜினிகாந்தை சந்தித்ததன் மூலம் அவரது வாக்குகளை கொஞ்சம் கொண்டுவர
முடியும் என்பதற்காகவே இந்த சந்திப்பு என்றும், நேரடியாக ஆதரவு கேட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த சந்திப்புக்கு ரவீந்திரன் துரைசாமி ஏற்பாடு செய்திருக்கிறார். இதனை பா.ஜ.க. ஆதரவாளர்களான
ரங்கராஜ் பாண்டே, மாரிதாஸ் போன்றவர்கள் நல்ல முடிவு என்று ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த சந்திப்பின் மூலம் உடனடியாக ரஜினி ஆதரவு கொடுத்துவிட்டார் என்று அர்த்தம் ஆகாது.
அதேநேரம், ஒருபோதும் வெளிப்படையாக சீமானுக்கு ஆதரவாகப் பேசவும் மாட்டார் என்பது உண்மை.
ஆனால், அவரது ஆதரவாளர்கள் வாக்குகளைப் பெற முடியும்.
விஜய் வரவு காரணமாக
ஒரு குறிப்பிட்ட சதவீத வாக்குகள் சீமானுக்கு இழப்பு நேரிடும் என்பது மறுக்க முடியாத
உண்மை. அந்த வாக்குகளை ரஜினி ஆதரவாளர்கள் மூலம் ஈடுகட்டுவதன் மூலம் நிரப்பிவிடலாம்
என்பது தான் சீமான் நம்பிக்கை. இதையடுத்து இப்போது சீமான் ஆதரவாளர்கள் ரஜினியை புகழ
ஆரம்பித்திருக்கிறார்கள்.
இது ஒரு நல்ல அரசியல்
விளையாட்டு என்றாலும் இன்னமும் விஜய்க்கு வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள். சீமான்
ரஜினியை சந்தித்தது போலவே, விஜய்யும் சந்தித்துப் பேசினால் அரசியல் கணக்கு மாறும் என்கிறார்கள்.
ரஜினியிடம் இறங்கிப்
போவாரா விஜய்..?