Share via:
சென்யையில் நடைபெற்ற கலைஞர் நூல் வெளியிட்டு வீழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் 30 நிமிடங்கள் பேசிய அனைத்துமே இப்போது அரசியலாக மாறி பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின் பேரில்தான் அவர் அவ்வாறு பேசியுள்ளார் என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் கே.பி.முனுசாமி பேசும்போது, ‘‘தி.மு.க.வில் இருந்து சீனியர்களை வெளியேற்றுவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்லித்தான் ரஜினிகாந்த் பேசியிருக்கிறார். ஸ்டாலின் நினைத்ததைத்தான் அவர் பேசியிருக்கிறார். அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட மூத்தவர்கள் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று அவரை பேச வைத்திருக்கிறார்கள். அதைத்தொடர்ந்து அவரது மகனும், அமைச்சருமான உதயநிதியும் வழிமொழிந்து பேசினார் என்று தெரிவித்தார் கே.பி.முனுசாமி.
பின்னர் அண்ணாமலை குறித்த கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், ஆளுமைமிக்க தலைவர் எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்வதற்கு அண்ணாமலைக்கு எந்த உரிமையும் கிடையாது. அண்ணாமலைக்கு பயம் வந்துவிட்டது. தலைமை பொறுப்பில் இருக்க தகுதியற்ற அவர், இருக்கின்ற வரையில் ஏதாவது கருத்தை சொல்லிவிட்டு செல்லலாம் என்று நினைத்து பேசி வரும் அண்ணாமலையை தலைமை பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்தார்.
அ.தி.மு.க.வை பொறுத்தவரை கட்சியில் எந்த பிளவும் இல்லை. சிதறலும் இல்லை. எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் கீழ் ஒன்றாக செயல்பட்டு வருகிறோம். சூழலுக்கு ஏற்ற வகையில்தான் கூட்டணி அமைக்கப்படுகிறது. எனவே வருகிற 2026ம் ஆண்டு வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் யார், இணைவார்கள் என்பதை பொறுத்தே கூட்டணி அமையும் என்று பேசியது பலரின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.