Share via:
இறுதிப் போட்டியில்
தங்கத்திற்கு அருகில் நிற்கும் வினேஷ் போகத்திற்கு நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித்
தலைவர் ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்திருக்கிறார். ஒலிம்பிக் விளையாட்டில் இந்தியா
போன்ற மாபெரும் தேசத்துக்கு பதக்கப்பட்டியலில் மரியாதைக்குரிய இடம் கிடைக்கவே இல்லை.
இதற்குக் காரணம் பிரிஜ்பூஷன் போன்ற பா.ஜ.க. தலைவர்கள் தான் என்பது அம்பலப்பட்டுள்ளது.
வினேஷ் போகத் பெற்றிருக்கும்
வெற்றி சாதாரண ஒன்று அல்ல. தொடர்ந்து 82 சர்வதேசப் போட்டிகளில் வெற்றியைக் காணாத, நான்கு
முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவரை, முன்னாள் உலகச் சாம்பியனை வீழ்த்தியுள்ளார்.
அடுத்த அரையிறுதிப்
போட்டியில் பெண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதியில் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ்
குஸ்மேனுடன் மோதினார் இந்தியாவின் வினேஷ் போகத். முதல் நிமிடத்திலேயே வினேஷின் ஆக்ரோஷமான
ஆட்டத்தால் நிலை தடுமாறிய யூஸ்னிலிஸ் எந்த ஸ்கோரும் எடுக்கவில்லை.
முதல் மூன்று நிமிடங்களில்
ஒரு பாயின்ட் ஸ்கோர் செய்த வினேஷ் போகத், அடுத்தடுத்த 5 பாயின்ட்களை குவித்தார். ஆட்டத்தில்
இறுதியில் 5-0 என்ற கணக்கில் யூஸ்னிலிஸ் குஸ்மேனை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இதன் மூலம் நடப்பு ஒலிம்பிக் தொடரில் மல்யுத்த போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை உறுதி
செய்துள்ளார் வினேஷ் போகத்.
மல்யுத்த இறுதி சுற்றுக்கு
முன்னேறியதற்கு மத்திய முன்னாள் கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மட்டுமே இதுவரை
வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில், ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டிக்கு
முன்னேறிய வினேஷ் போகத்துக்கு . காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி தனது
பதிவில்: “உலகின் தலைசிறந்த மூன்று மல்யுத்த வீரர்களை ஒரே நாளில் தோற்கடித்த வினேஷுடன்
ஒட்டுமொத்த நாடும் இன்று நெகிழ்ச்சி அடைகிறது.
வினேஷ் மற்றும் அவரது
சகாக்களின் போராட்டத்தை மறுத்தவர்கள், அவர்களின் நோக்கம் மற்றும் திறமைகள் குறித்து
கேள்வி எழுப்பியவர்கள், அனைவருக்கும் இன்று பதில் கிடைத்துள்ளது. இந்தியாவை இரத்தக்
கண்ணீர் வடிக்க வைத்த ஒட்டுமொத்த அதிகார அமைப்பும் இன்று இந்தியாவின் வீர மகளின் முன்
உடைந்து போனது.
இதுதான் சாம்பியன்களின்
அடையாளம், அவர்கள் களத்தில் இருந்து தங்கள் பதிலைத் தருகிறார்கள். வாழ்த்துகள் வினேஷ்.
பாரிஸில் உங்கள் வெற்றியின் எதிரொலி டெல்லி வரை தெளிவாகக் கேட்கிறது” என்று ராகுல்
காந்தி பாராட்டியுள்ளார்.