Share via:
vபிரதமர் மோடி பதவி ஏற்ற நேரத்தில் அரசியல் சாசன புத்தகத்தைத் தூக்கிக் காட்டி நாடாளுமன்றத்தில் பரபரப்பு உண்டாக்கினார் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி. கடந்த ஆட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு மெஜாரிட்டி இல்லை என்பதால், அவரை எம்.பி. பதவியில் இருந்து தூக்கி வீட்டையும் காலி செய்ய வைத்தார் மோடி.
ஆனால், இப்போது அவருக்கே பெரும்பான்மை இல்லை. ஆகவே, முதல் நாள்
பதவி ஏற்பின் போதே எதிர்க் கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்கும் நிலைக்கு ஆளாகியிருக்கிறார்.
அதோடு மோடி ஆட்சிக்கு வந்த 15 நாட்களில் நடந்த முக்கியமான பத்து
விஷயங்களை பட்டியலிட்டுள்ள ராகுல் காந்தி, மோடி அரசு தோல்வி அடைந்துள்ளது என்று கூறியிருக்கிறார்.
இது தான் ராகுல் வெளியிட்ட பட்டியல். 1. மேற்கு வங்கத்தில் பயங்கர
ரயில் விபத்து 2. காஷ்மீரில் தொடர் தீவிரவாத தாக்குதல்கள் 3. ரயில்களில் பயணிகள் எதிர்கொள்ளும்
அவல நிலை 4. பல லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்ற நீட் தேர்வு முறைகேடு 5. நீட் முதுகலை
தேர்வு கடைசி நேரத்தில் ரத்து
6. UGC NET வினாத்தாள் கசிவு பிறகு தேர்வு ரத்து 7. பால், பருப்பு
வகைகள், எரிவாயு, கட்டணங்கள் விலை உயர்வு 8. கட்டுக்கடங்காத காட்டுத் தீ 9. தலைநகரில்
கூட தண்ணீர் பிரச்சனை 10. வட இந்தியாவில் வெப்ப அலையை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்காததால்
ஏற்படும் உயிரிழப்புகள்.
இனிமேலும் இவ்வாறான முக்கிய பிரச்சனைகளுக்கு பொறுப்பேற்காமல் பிரதமரை
தப்பிக்க அனுமதிக்க மாட்டோம் என ராகுல் காந்தி எச்சரிக்கை செய்திருக்கிறார்.
ஆஹா, அனல் அடிக்குதே.