Share via:

ராமஜென்ம பூமி அறக்கட்டளையில் முக்கியப் பங்கு வகித்தவரும் அமித்ஷாவுக்கு
நெருக்கமான நண்பராகக் கருதப்படுபவருமான ஞானேஷ்குமார் புதிய தேர்தல் ஆணையராக நியமனம்
செய்யப்பட்டிருப்பதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை எதிர்க்கட்சித்
தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் அடங்கிய தேர்தல் கமிட்டி புதிய தலைவரை தேர்வு செய்வதற்குக்
கூடியது. புதிய நியமன நடைமுறையை எதிர்த்து
தொடரப்பட்ட வழக்குகள் மீது உச்ச நீதிமன்றம் முடிவு செய்யும் வரை, நியமனத்தை ஒத்திவைக்குமாறு
ராகுல் காந்தி வலியுறுத்தினார். ஆனால், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு ஞானேஷ் குமார்
புதிய தலைமை தேர்தல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் 65 வயதை எட்டியதை அடுத்து இன்றுடன்
ஓய்வு பெறுகிறார். இதனையடுத்து, இரண்டு தேர்தல் ஆணையர்களில் சீனியரான ஞானேஷ் குமார்
நாட்டின் 26-ஆவது தலைமைத் தேர்தல் ஆணையராக
பதவியேற்க உள்ளார். இந்த நியமனத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், ‘’தேர்தல் ஆணையர்
நியமனச் சட்டத்திற்கு எதிரான வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது. அவசர, அவசரமாக நள்ளிரவில்
புதிய தலைமைத் தேர்தல் ஆணையரை நியமதித்தது தவறு. புதிய தலைமை தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுக்கும்
விவகாரத்தில் ஒன்றிய அரசால் ஒரு நாள் கூட காத்திருக்க முடியாதா? ஏன் இந்த அவசரம்? தேர்தல்
ஆணையத்தை தனது கைப்பாவையாக மாற்றி, தங்களுக்கு சாதகமாக தேர்தல் நடைமுறைகளை மாற்றி வருகிறது.
ஒன்றிய அரசின் இந்த செயல் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. போலி வாக்காளர் பட்டியல்,
மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு என பா.ஜ.க., மீதான சந்தேகம் தற்போது
மேலும் வலுத்து வருகிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
பா.ஜ.க.வுக்கு சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவற்றை
அடுத்து நான்காவது ஆயுதமாக தேர்தல் கமிஷனும் வந்துவிட்டதா..?