Share via:
தமிழகத்தில் தி.மு.க.
கூட்டணி முடிவாகிவிட்டது என்றாலும் எதிர்க் கட்சிகளான அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வுக்கும்
இழுபறி நிலையே நீடிக்கிறது. பா.ம.க. மற்று தே.மு.தி.க. ஆகிய இரண்டு கட்சிகளும் அ.தி.மு.க.வுடன்
கூட்டணி தொடர்வதையே விரும்புகின்றன.
ஆனால், மத்திய பா.ஜ.க.
ஏதேனும் அழுத்தம் கொடுத்து தங்கள் பக்கம் ஏதேனும் ஒரு கட்சியை இழுப்பதில் ஆர்வம் காட்டி
வருகிறது. ஆகவே, இரண்டு பக்கமும் தேர்தல் கூட்டணி இழுபறியாக உள்ளது.
இந்த நிலையில் மற்றவர்களுக்கு
முன்பாக முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று பா.ஜ.க. ஆர்வம் காட்டிவருகிறது.
ஆகவே, இப்போதைக்கு உறுதியான மனநிலையில் உள்ளவர்களை வைத்து 10 பேர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கன்னியாகுமரியில்
பொன். ராதாகிருஷ்ணனும் திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரனும் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது.
சரத்குமார் கட்சிக்குள் நுழைவதைப் பார்த்ததுமே நயினார் தேர்தல் வேலையை தொடங்கிவிட்டார்.
ஆகவே, சரத்குமாருக்கு இங்கு வாய்ப்பில்லை என்பது உறுதியாகிவிட்டது. ஆகவே, தூத்துக்குடியில்
கனிமொழிக்கு எதிராக ராதிகா சரத்குமாரை நிறுத்துவதற்கு பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. நாடார்
ஓட்டுகளை பிரித்துவிடலாம் என்று நினைக்கிறார்கள்.
அதேபோல் தென்காசி
தொகுதியில் பெ. ஜான்பாண்டியன், தேனி தொகுதியில்
டிடிவி.தினகரன், திண்டுக்கல் தொகுதியில் சந்திரசேகர், மதுரைக்கு கே.சி.திருமாறன், ராமநாதபுரத்தில்
பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி. ரவீந்திரநாத், சிவகங்கையில் தேவநாதன் ஆகியோர் போட்டியிடுவது
உறுதியாகியுள்ளது.
இந்த பட்டியல் டெல்லிக்குப்
போயிருக்கிறதாம். நாளை இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.