Share via:
ரிசர்வ் வங்கி ஆளுநராக 6 ஆண்டுகள் பதவி வகித்த சக்திகாந்த தாஸ்
இந்திய பிரதமர் மோதியின் 2வது முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள செய்தி நடுநிலை
அரசியல் விமர்சகர்களை அதிர வைத்திருக்கிறது. அதேபோல் முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்
நியமனமும் சர்ச்சையை ஏற்படுத்துகிறது.
நாட்டின் முக்கியமான பொறுப்புகளில் இருப்பவர்கல் ஆளும் கட்சிக்கு
ஆதரவாக நடந்துகொண்டால், ஓய்வு காலத்திற்குப் பிறகு அவர்களுக்கு உயர் பதவி கொடுத்து
அழகு பார்ப்பது பா.ஜ.க.வின் அஜெண்டாவாக இருந்துவருகிறது. அப்படித் தான் ராமர் கோயில்
விவகாரத்தில் வில்லங்கமான தீர்ப்பு தந்தார் என்று நீதிபதி சந்திரசூட் மீது கடுமையான
விமர்சனங்கள் எழுந்தன.
சுதந்திரத்திற்குப் பிறகு வழிபாட்டு இடங்களில் என்ன நிலையில் இருந்தனவோ,
அப்படியே அவை தொடரவேண்டும் என்பதையே மாற்றி ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவாக இருந்தார்.
அதேபோல் பிரதமர் மோடியை வீட்டுக்கு வரவழைத்து பூஜைகள் செய்து தான் ஒரு இந்து என்று
பெருமையுடன் சொல்லிக்கொண்டார். அதனால் ஆல் இண்டியா ஜுடிசியல் சர்வீசஸ் தலைவர் எனும்
பதவி கொடுக்கப்பட்டது. அப்போதே, இனி நியமனம் செய்யப்படும் நீதிபதிகள் எல்லாம் பா.ஜ.க.
ஆதரவாளர்களாகவும் சங்கீ மனப்பான்மை கொண்டவர்களாகவுமே இருப்பார்கள் என்று குற்றச்சாட்டு
எழுந்தது.
இந்நிலையில் பிரதமரின் முதன்மைச் செயலாளராக சக்திகாந்த் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்
.பிரதமர் மோடியின் பதவிக்காலம் முடியும் வரை அல்லது மறு உத்தரவு வரும்வரை இந்தப் பதவியில்
நீடிப்பார் என்று சொல்லப்படுகிறது. இவர் தான், ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த போது
மோடி கேட்கும்போதெல்லாம் ரிசர்வ் வங்கியின் அவசரகால சேமிப்புப்பணத்தை அள்ளிக்கொடுத்தவர்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை நேரத்தில் 2,000 ரூபாய் நோட்டுகள் சாயம்
போவதாக புகார் கூறப்பட்டது. அதற்கு சக்தி காந்த தாஸ், ‘’அப்படி சாயம் போனால்தான் ஒரிஜினல்
2000 நோட்டு என்று வக்காலத்து வாங்கி அவமானப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்
கையில் பொருளாதாரத்தைக் கொடுத்தால் உருப்பட்ட மாதிரிதான். இந்தியாவின் ஜனநாயகத்துக்கு
மிகப்பெரும் ஆபத்து காத்திருக்கிறது என்கிறார்கள்.