News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், ஓ.பன்னீர்செல்வம், துர்கா ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு ஆண்டும் நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் நவராத்திரி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த கொலுவை பார்ப்பதற்காகவும் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காகவும் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றுக் கொண்ட முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின், சகோதரி செல்வி, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

சிறப்பு பூஜையை ரஜினிகாந்தின் மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சவுந்தர்யா ஆகியோர் இணைந்து நடத்தினர். அதேபோல் நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா, நடிகை மீனா, பழம்பெரும் நடிகை லதா உள்ளிட்ட திரை நட்சத்திரங்களும் நவராத்திரி விழாவில் கலந்து கொண்டு வழிபட்டனர்.

பிரபலங்களின் வருகையால், ரஜினிகாந்த் வீடு அமைந்துள்ள போயஸ்கார்டன் சில மணிநேரங்களுக்கு பரபரப்பாக காணப்பட்டது. நவராத்திரி விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் இப்போது டிரெண்டிங்காகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link