Share via:
0
Shares
புதுச்சேரியின் புதிய பா.ஜ.க. தலைவராக செல்வகணபதி எம்.பி. தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் சாமிநாதன் பா.ஜ.க. தலைவராக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் சாமிநாதன் தற்போது மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக எம்.பி.செல்வகணபதி புதுச்சேரி பா.ஜ.க. தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டா வெளியிட்டுள்ளார். வருகிற 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இந்த மாற்றம் நடைபெற்றுள்ளதாக கூறப்படும் நிலையில் நாகாலாந்திலும் பா.ஜ.க. மாநில தலைவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tagged latest