Share via:
பிரபல தயாரிப்பாளர் வி.ஏ.துரை உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள அவரது வீட்டில் நேற்று இரவு காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நடிகர் சூர்யா, விக்ரம் இணைந்து நடித்த திரைப்படம் பிதாமகனை தயாரித்தவர் வி.ஏ.துரை. 69 வயதான இவர் என்னம்மா கண்ணு, லூட்டி, லவ்லி, பிதாமகன், கஜேந்திரா உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார். மேலும் ரஜினிகாந்த் நடித்த பாபா திரைப்படத்தில் எக்சிகியூட்டிவ் புரொடியூசராகவும் பணியாற்றியுள்ளார்.
கடந்த சில நாட்களாக சர்க்கரை வியாதியால் அவதிப்பட்டு வந்த வி.ஏ.துரை ஏற்கனவே மனைவி மற்றும் மகளை பிரிந்து தனிமையும் வாடியுள்ளார். மேலும் இயக்குனர் பாலா பணமோசடி செய்துவிட்டதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து வி.ஏ.துரையின் அனைத்து மருத்துவ செலவுகளையும் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், நடிகர் சூர்யா, கருணாஸ் ஆகியோர் ஏற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த வி.ஏ.துரை நேற்று இரவு மரணமடைந்தார். அவரின் மறைவுக்கு திரையுலகினர் திரளானோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

