Share via:
vஇன்று 18வது மக்களவை கூட்டத்தொடரில் முதல் எம்.பி.யாக பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு தற்காலிகப் பிரதமர் மஹ்தாப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
முன்னதாக நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே பேசிய மோடி, ‘’60 ஆண்டுகளுக்குப்
பிறகு தொடர்ந்து 3வது முறையாக ஆட்சி அமைக்க எனக்கு மக்கள் வாய்ப்பு வழங்கியிருக்கிறார்கள்.
மக்கள் நலத் திட்டங்கள் நிறைவேற நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அவசியம்.
எதிர்க்கட்சிகள் மக்கள் நலத்திட்டங்களில் சாமானிய மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற
வேண்டும்.’’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் இன்றும் நாளையும் பதவியேற்பு வைபவங்கள் மட்டுமே
நடக்கும். இதையடுத்து நீட் தேர்வு விவகாரத்தில் புயல் எழுப்புவதற்கு எதிர்க்கட்சிகள்
ஒன்றிணைந்து போராட இருக்கின்றன.
மக்களவை சபாநாயகர் பதவி சந்திரபாபு நாயுடு கட்சிக்குக் கிடைக்கும்
என்று எதிர்பார்த்த நிலையில், ‘தெலுங்கு தேசம் கட்சிக்கு சபாநாயகர் பதவி தேவையில்லை.
மாநில மக்கள் நலனே முக்கியம்’ என்று சந்திரபாபு நாயுடு அறிவித்திருக்கிறார்.
எப்போதும் தன்னைப் பற்றியும் தங்கள் கட்சியின் பெருமையைப் பற்றி
மட்டுமே பேசும் மோடி, முதன்முறையாக எதிர்க்கட்சிகளை கெஞ்சும் நிலைக்கு வந்திருக்கிறார்.